கடலூர் மாவட்டம், திட்டக்குடியை அடுத்த வாகையூர் கிராமத்தில் ரேஷன் அரிசி கடத்தி செல்வதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் வட்ட வழங்கல் அலுவலர் சீனிவாசன், தனி வருவாய் ஆய்வாளர் முருகன் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மினி டெம்போவை வழிமறித்து சோதனை செய்தனர்.
அதில் 50 கிலோ எடையுள்ள 22 ரேசன் அரிசி மூட்டை கடத்திச் சென்றது தெரியவந்தது. அதையடுத்து கடத்தப்பட்ட ரேஷன் அரிசி மூட்டைகளைப் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் ரேஷன் அரிசியைக் கடத்தியது சித்தூரைச் சேர்ந்த சத்தியசீலன் என்பது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து மினி டெம்போவையும், அதிலிருந்த ரேஷன் அரிசி மூட்டைகளையும் பறிமுதல் செய்ததுடன், சத்தியசீலனையும் கைது செய்து திட்டக்குடி காவல் நிலைத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் திட்டக்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்துரு வழக்குப் பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றார்.