Published on 16/05/2022 | Edited on 16/05/2022
திருச்சி மாவட்ட காவல் நிலையங்கள் மற்றும் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நடைபெறும் நிகழ்வுகளையும், சட்ட ஒழுங்கு பிரச்சனை எழும் சூழ்நிலையும் கண்காணித்து முன்கூட்டியே மாவட்ட எஸ்.பிக்கு தகவல் தெரிவிக்க தனிப்பிரிவு இயங்கி வருகிறது. இந்த பிரிவில் துவாக்குடி, நவல்பட்டு, வாத்தலை, காட்டுப்புத்தூர், முசிறி, புலிவலம், சோமரசம்பேட்டை, சமயபுரம், மண்ணச்சநல்லூர், கொள்ளிடம், மணிகண்டம், சமயபுரம், உப்பிலியபுரம், ஜெகநாதபுரம், தா.பேட்டை ஆகிய காவல் நிலையங்களில் பணிபுரிந்த 17 போலீசார் இடமாற்றம் செய்யப்பட்டு உடனடியாக மாற்றுப் பணியில் சேர திருச்சி எஸ்.பி சுஜித் குமார் உத்தரவிட்டுள்ளார்.