Published on 10/07/2021 | Edited on 10/07/2021

தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றிபெற்று ஆட்சி பொறுப்பேற்றதையடுத்து பல்வேறு துறை அதிகாரிகளும் மாற்றம் செய்யப்பட்டுவருகின்றனர். அதன்படி பல ஐஏஎஸ் அதிகாரிகள், ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில், இன்று (10.07.2021) 13 நகராட்சி ஆணையர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் 13 நகராட்சி ஆணையர்கள் மாற்றப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், மறைமலைநகர், தாம்பரம் உள்ளிட்ட 13 நகராட்சி ஆணையர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பல்லாவரம், கொடைக்கானல் உள்ளிட்ட நகராட்சி ஆணையர்களும் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதேபோல் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆறு வட்டாட்சியர்களை மாற்றம் செய்து ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.