Published on 09/04/2020 | Edited on 09/04/2020
சுற்றுலா விசா விதியை மீறி தமிழகத்தில் மத பிரச்சாரம் செய்த தாய்லாந்து, மலேசியா, இந்தோனேஷியா, வங்கதேச நாடுகளை சேர்ந்த 129 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும் கரோனா இருக்கிறது என தெரிந்தும் நோய் பரப்பியதாக சில இடங்களில் காவல்துறையினர் வெளிநாட்டினர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களில் பெரும்பாலும் டெல்லி மாநாட்டில் பங்கேற்றுவிட்டு, தமிழகத்தில் சேலம், ஈரோடு, சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களுக்கு சென்றுள்ளனர். இதில் சேலம், ஈரோட்டில் பிரச்சாரம் செய்த தாய்லாந்து மற்றும் இந்தோனோஷியாவை சேர்ந்த வெளிநாட்டினர் கரோனா பாதிப்புடன் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.