Skip to main content

பூண்டி ஏரியிலிருந்து 12,000 கன அடி நீர் திறப்பு... கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

Published on 28/11/2021 | Edited on 28/11/2021

 

12 cubic feet of water released from Boondi Lake ... Flood alert for coastal people!


சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தமிழ்நாட்டில் ஐந்து மாவட்டங்களில் இன்று (28/11/2021) மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதன்படி, கடலூர், மயிலாடுதுறை, நாகை, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று மிக கனமழை பெய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஏரியிலிருந்து உபரி நீர் திறப்பு 8,000 கன அடியிலிருந்து 12 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. தற்போது பூண்டி ஏரிக்கு நீர்வரத்து 12 ஆயிரம் கன அடியாக உள்ளதையடுத்து உபரி நீர் திறப்பு 12,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. உபரிநீர் திறப்பால் பூண்டி முதல் எண்ணூர் வரை உள்ள கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அதேபோல் ஆரணி ஆற்றில் நீர்வரத்து 3000  கன அடியாக அதிகரித்துள்ளது. ஆந்திராவின் பிச்சாட்டூர் அணையிலிருந்து 3 ஆயிரம் கனஅடி நீர் திறப்பால் உபரி நீர் வரத்து 3,000 கன அடியாக அதிகரித்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாஜக மாநில நிர்வாகி வீட்டில் பறக்கும்படை சோதனை

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Air force raids BJP state executive's house


நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தீவிரப்படுத்தியுள்ளன.

இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியுள்ளது. அதேநேரம் தேர்தல் பறக்கும் படை பல்வேறு இடங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் பாஜக மாநில நிர்வாகி ஒருவர் வீட்டில் பறக்கும் படை திடீர் சோதனை நடத்தி வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாஜக ஓபிசி அணி மாநிலச் செயலாளர் கே.ஆர்.வெங்கடேசன் என்பவர் வீட்டில் பறக்கும் படையானது சோதனை நடத்தி வருகிறது. திருவள்ளூரில் பாஜக சார்பில் பணம் பட்டுவாடா செய்வதற்காக நிர்வாகி வீட்டில் பணம் பதுக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவலை அடுத்து,  பாடிய நல்லூரில் உள்ள வெங்கடேஷ் வீட்டில் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story

பிரச்சாரத்தில் பணப்பட்டுவாடா; பாஜக நிர்வாகி மீது வழக்குப்பதிவு!

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
pay for campaigning Case filed against BJP executive

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இத்தகையை சூழலில் திருவள்ளூரில் உள்ள ஆரம்பாக்கத்தில் பாஜக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபடும் பெண்களுக்கு, ஐந்து பேருக்கு 500 ரூபாய் என்ற ரீதியில் பணம் விநியோகம் செய்தது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகியது. திருவள்ளூர் பாஜக வேட்பாளர் பொன். பாலகணபதியை ஆதரித்து கும்மிடிப்பூண்டி அருகே பிரச்சாரத்தில் ஈடுபட்ட பொழுது பாஜக கொடியை ஏந்திச் செல்லும் பெண்கள் ஒவ்வொருவருக்கும் தலா 100 ரூபாய் என ஐந்து பேருக்கு மொத்தமாக 500 ரூபாய் கொடுக்கப்படும் காட்சி இணையத்தில் வைரலானது.

சுமார் 30 க்கும் மேற்பட்ட பெண்களுக்கு 500 ரூபாய் நோட்டுகளை பாஜகவினர் கொடுக்கும் அந்த வீடியோ காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் இது குறித்து கும்மிடிப்பூண்டி சட்டமன்றத் தொகுதியின் தேர்தல் பறக்கும் படை அதிகாரி சம்பத் ஆரம்பாக்கம் போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் நொச்சிக்குப்ப்பத்தைச் சேர்ந்த பாஜக நிர்வாகி குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.