
செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் நேற்று (04.05.2021) நள்ளிரவு கரோனாவால் பாதிக்கப்பட்ட 11 பேர் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அம்மாவட்டத்தில் தினமும் 500க்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டு வருகிறது. இதன் காரணமாக நூற்றுக்கணக்கான நோயாளிகள் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையின் கரோனா பிரிவில் சிகிச்சை பெற்றுவருகிறார்கள்.
இந்நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக நேற்று நள்ளிரவு கரோனா பாதித்தவர்கள் 11 பேர் அடுத்தடுத்து மரணமடைந்தார்கள். இதுவரை மருத்துவமனை தரப்பில் இருந்து இதற்கான காரணம் குறித்துவிளக்கம் அளிக்கப்படவில்லை. ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாகவே அவர்கள் உயிரிழந்துள்ளதாக இறந்தவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளார்கள். இந்த சம்பவம் செங்கல்பட்டு மாவட்டத்தில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)