
தமிழகத்தில் 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. அரசியல் கட்சிகளும் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் நேர்காணல், வேட்புமனுத் தாக்கல் என அனைத்தையும் முடித்து தேர்தலுக்கான இறுதிக்கட்டப் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. வாக்குப்பதிவு நாளுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் பிரச்சாரக் களம் சூடுபிடித்துள்ளது.
இந்நிலையில் கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில், 11 லட்சம் ரூபாய்பணம்சாலையில் வீசப்பட்ட சம்பவம்அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.குறிஞ்சிப்பாடி தொகுதிக்கு உட்பட்ட எஸ்.புதூர்கிராமத்தில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கப்படுவதாக தகவல் கிடைத்த நிலையில், அங்கு தேர்தல் பறக்கும் படையினர் துணை ராணுவப் படையினருடன் விரைந்தனர். தேர்தல் பறக்கும் படையினர் வருவதைக் கண்ட சிலநபர்கள் பணத்தை சாலையிலேயே போட்டுவிட்டுதப்பியோடிய நிலையில், சாலையில் கிடந்த 11.38 லட்சம் ரூபாயைபறக்கும் படையினர் பறிமுதல் செய்து குறிஞ்சிப்பாடி தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெயகுமாரிடம்ஒப்படைத்துள்ளனர். இதுகுறித்து தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெயகுமார்வருமான வரித்துறைக்குப் புகாரளித்த நிலையில், வருமான வரித்துறையினரும், தேர்தல் பறக்கும் படையினரும்ஒருசேர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு கூடியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)