Skip to main content

11- ஆம் வகுப்புக்கான நுழைவுத்தேர்வு ரத்து!

 

+1 classes entrance exams cancel education department announced

 

11- ஆம் வகுப்புக்கான நுழைவுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

 

இது தொடர்பான தமிழக பள்ளிக்கல்வித்துறை ஆணையர் அறிவிப்பில், "11- ஆம் வகுப்புக்கான நுழைவுத்தேர்வு ரத்துச் செய்யப்படுகிறது. 10- ஆம் வகுப்பு பாடத்தின் அடிப்படையில் தேர்வு எதுவும் நடத்தத் தேவையில்லை. 9- ஆம் வகுப்பு மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டு மாணவர்கள் விருப்பத்தின்படி பிரிவுகளை ஒதுக்க அறிவுறுத்தப்படுகிறது. 11- ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அரசின் வழிகாட்டுதல்படி, ஜூன் மாதம் மூன்றாவது வாரத்தில் ஆன்லைன் வகுப்புகளைத் தொடங்கலாம். 11- ஆம் வகுப்பில் ஒவ்வொரு பிரிவிலும் 10% முதல் 15% கூடுதலாக மாணவர்களைச் சேர்க்கலாம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.