
"தமிழகத்தில் பெண்களுக்கு முழு பாதுகாப்பு இல்லை" என இரண்டாவது நாள் பிரச்சாரத்தில் பேசினார் கமல்ஹாசன்.
திருச்சியில் இருந்து அரசியல் பிரச்சாரத்தை துவங்கிய மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், தஞ்சாவூர் பட்டுக்கோட்டை என வரிசையாக மக்களை சந்தித்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் பிரச்சாரத்தைத் தொடங்கிய கமல்ஹாசன், வேளாங்கண்ணி தனியார் விடுதியில் மகளிர் மற்றும் இளைஞர்களிடம் கலந்துரையாடினார். மக்கள் நீதி மய்யத்தின் பெண் உறுப்பினர் சேர்க்கைக்கான அடையாள அட்டைகளை வழங்கிவிட்டு பேசிய அவர், "பொள்ளாச்சி சம்பவத்தில் 600 நாட்களை கடந்தும் இதுவரை தண்டனை வழங்காமல் உள்ளது. பாதிகப்பட்ட பெண்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை. தற்போது தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை” என்று தெரிவித்தார். மேலும், “தமிழக உரிமைகளை விட்டுக்கொடுக்காத அரசாக மக்கள் நீதி மய்யம் இருக்கும்” என பேசினார்.