மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் வியாபார நிறுவனங்களை மூடுமளவுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என புதுச்சேரி முதல் அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.
புதுச்சேரியில் செய்தியாயளர்களிடம் பேசிய அவர்,
மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் 15 லட்சத்து 31 ஆயிரம் கோடி ரூபாய் (93.3 %) செல்லாத நோட்டுகள் திரும்பி வந்துள்ளது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. பணமதிப்பிழப்பால் பொருளாதார பாதிப்பு, வியாபார நிறுவனங்கள் மூடுதல் உள்ளிட்ட பல இழப்புகள் ஏற்பட்டுள்ளது. இதற்கான முழு பொறுப்பையும் பிரதமர் மோடி ஏற்றுக்கொள்ள வேண்டும். இதற்கு பகிரங்கமாக நாட்டு மக்களுக்கு பதிலளிக்க வேண்டும்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்துவதில் மத்திய அரசு தோல்வி அடைந்துள்ளது. இதுசாதாரண, நடுத்தர மக்களிடம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசின் தவறான கொள்கையால் பெட்ரோல், டீசல் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. இது பாரளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும்.
தனிப்பட்ட கருத்துக்களை உள்வாங்கிக்கொள்வது தான் நாட்டின் பலம். தனி மனித சுதந்திரத்தை பறித்து விடலாம் என என்னும் மத்திய அரசின் பகல் கனவு பலிக்காது. இவ்வாறு கூறினார்.
மேலும் கேரள மாநில வெள்ள பாதிப்புகளின் நிவாரணத்திற்காக பொதுமக்களிடமிருந்து பெற்ற நிவாரணபொருட்கள் அரசின் சார்பில் அனுப்பட்டுள்ளது. நிவாரண நிதிக்காக முதல்வர் நிவாரண நிதி மூலமாக 10 கோடி வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு வார காலத்தில் நிதி அனுப்பப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.