அதிமுகவில் ஒற்றைத் தலைமை வேண்டும் என அக்கட்சியினர் உட்பட சில நிர்வாகிகளின் கோரிக்கை தற்போது அதிமுக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. கடந்த 14ம் தேதி அதிமுக அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டத்தில் இந்தக் கோரிக்கை எழுந்த பின் ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ். இருவரும் தனித்தனியே தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திவருகின்றனர். நேற்று அதிமுகவின் ஒருங்கிணைப்பாளாரான ஓ.பி.எஸ். ஒற்றைத் தலைமை தேவையற்றது என்று கருத்து தெரிவித்திருந்தார். இந்நிலையில், இன்று அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ ரத்னசபாபதி, எம்.பி. மைத்ரேயன், வேளச்சேரி அசோகன், மகளிரணியை சேர்ந்த நிர்வாகிகள் ஆகியோர் ஓ.பி.எஸ். வீட்டிற்கு வந்து ஆலோசனையில் ஈடுபட்டனர். அதேபோல், அதிமுக மூத்த தலைவர் தம்பிதுரை மற்றும் ஓ.பி.எஸ்.-ன் இரண்டாவது மகன் ஜெயபிரதீப் ஆகியோரும் ஓ.பி.எஸ். இல்லத்திற்கு வந்து அவரை சந்தித்துப் பேசினர்.