Sasikala

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அவரது தோழி சசிகலா இன்று (16.10.2021) மரியாதை செலுத்தினார்.

Advertisment

சென்னை தி.நகரில் உள்ள இல்லத்திலிருந்து இன்று காலை 10.30 மணிக்குப் புறப்பட்ட நிலையில், அவருக்குத் தொண்டர்கள் வரவேற்பளித்தனர். மெரினாவில் உள்ள ஜெ. நினைவிடம் சென்ற சசிகலா, அங்கு அவரது நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தியபோது அவரது கண்கள் கலங்கின.

alt="udanpirape" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="c0e51a31-832e-418e-b4f9-590c91cc47fb" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/udanpirappe-article-inside-500x300_143.jpg" />

Advertisment

அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த சசிகலா பேசுகையில், ''இத்தனை ஆண்டுகள் நான் மனதில் சேர்த்து வைத்திருந்த பாரத்தை ஜெயலலிதா முன்பு இறக்கி வைத்துவிட்டேன். எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் தொண்டர்களுக்காகவே வாழ்ந்தவர்கள்; தமிழக மக்களுக்காக வாழ்ந்தவர்கள். நிச்சயம் தொண்டர்களையும், கழகத்தையும் எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் காப்பாற்றுவார்கள் என்ற நம்பிக்கையோடு புறப்படுகிறேன்'' என்றார். அதிமுக தலைமை அலுவலகத்திற்கு எப்போது செல்வீர்கள் என்ற செய்தியாளர்களின் கேள்விக்குப் பதில் கூற மறுத்துவிட்டார்.