முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சரும், கரூர் அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர். விஜயபாஸ்கர் வீட்டில் காலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதன்படி சென்னையில் உள்ள அவரது வீட்டிலும், கரூரில் 20க்கும் மேற்பட்ட இடங்களிலும் இந்த சோதனை நடைபெற்றது. எட்டு மணி நேரமாக சென்னையில் தொடர்ந்து நடந்த சோதனை தற்போது நிறைவடைந்துள்ளது. இந்த நிலையில் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் கட்சியின் தொண்டர்கள் சென்னையில் உள்ள அவரது வீட்டின் முன்பு குவிந்து இருந்தனர். அதனைத் தொடர்ந்து சோதனை முடிந்த பின்னர் எம்.ஆர் விஜயபாஸ்கர் வெளியே வந்து அனைவரையும் பார்த்து கைக்கூப்பி வணக்கம் தெரிவித்தார்.

Advertisment