Skip to main content

மனைவிக்காக ஸ்ரீரங்கம் வந்த மு.க.ஸ்டாலின்!

srirangam


திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் பெருமாளை தரிசனம் செய்ய இந்தியா முழுவதிலும் இருந்து பக்தர்கள் எப்போதும் திரண்டு வருவார்கள். தமிழகத்திலும் பாரதிய ஜனதா கட்சி தன்னை தக்கவைத்து கொள்வதற்காக மக்களிடையே ஆன்மீகம் குறித்து நிறைய பேச ஆரம்பித்தனர். அதன் ஓரு பகுதியாக தான் சமீபத்தில் ரஜினி அரசியல் இறங்குவேன் என்று அறிவித்ததற்கு பிறகு ஆன்மீக அரசியல் பற்றி தமிழகத்தில் பரபரப்பாக பேசப்பபட்டது. இந்த நிலையில் இந்த ஆன்மீக அரசியல் என்பது திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினையும் விட்டு வைக்கவில்லை என்கிறார்கள் உடன் பிறப்புகள்.

 

 

திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் பிராத்தனை செய்வதற்காக மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் அடிக்கடி வருவது வழக்கம். அப்படி அவர் வரும்போது எல்லாம் அவருடன் கே.என்.நேருவின் மனைவியும் வருவார்களாம். எதிரிகளிடம் இருந்து காப்பாற்றுவதற்காகவும், இழந்ததை மீண்டும் பெறுவதற்காகவும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு சுக்கிரபரிகாரா பூஜை செய்ததன் பலனாக தான் தன் குடும்பத்திலும், அரசியலிலும் இரு தனித்தன்மை கிடைத்தாம். அதே போல தான் தற்போதும் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு செல்ல வேண்டும் என்று மனைவியின் ஆசையை நிறைவேற்றியிருக்கிறார் மு.க.ஸ்டாலின் என்கிறார்கள்.

இதன் அடிப்படையில், அன்பில் மகேஷ் பொய்யாமொழி உறவினர்கள் இரண்டு பேரின் திருமணமும், கட்சியினர் இருவரது மகளுக்கும், மகனுக்கு காதுகுத்தும் நிகழ்ச்சியும் ஸ்ரீரங்கம் கோவில் அருகே உள்ள திருமண மண்டபத்தில் வைத்து நடைபெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அந்த வகையில், இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக திருச்சி வருகை தந்த மு.க.ஸ்டாலினுக்கு ஸ்ரீரங்கம் ரெங்கா கோபுர வாசலில், யானை வைத்து மாலை அணி்வித்து ஸ்ரீரங்க பட்டர்கள் தலைமையில் ஸ்டாலினுக்கு பூரண மரியாதை கொடுத்தனர்.

தொடர்ந்து மு.க.ஸ்டாலினுக்கு திருமஞ்சன பொட்டு வைத்தார் பட்டர். அதனை சிரித்துக்கொண்டே ஏற்றுக்கொண்ட ஸ்டாலின் மெதுவாக அழித்தார். உடன் இருந்த வழக்கறிஞர் பாஸ்கர் மாலை அணிவித்த யானைக்கு கரும்பு சாப்பிட கொடுத்தார். அதன் பிறகு உடனே கோவிலின் வெளி சுற்று வழியே ஒரு சுற்று சுற்றி நேராக கல்யாண மண்டபத்திற்கு சென்றார்.
  mk


அங்கு மணமக்களுக்கும், காது குத்திய குழந்தைகளுக்கு வாழ்த்தும் தெரிவித்து விட்டு மேடையில் பேசி மு.க.ஸ்டாலின்,

நம் நாட்டில் காது குத்தும் ஆட்சியாளர்கள் தான் உள்ளனர். நாட்டை பற்றியோ, மக்களைப் பற்றியோ கவலைப்படாத மோடி ஆட்சியும், எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியும் தான் உள்ளது. ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் காவிரிக்காக பல போராட்டங்களை நடத்தியவர் கலைஞர். கர்நாடக அரசுடன் நட்புறவு வைத்து காவிரி நீரை பெற்று தந்தவர் கலைஞர்.

தற்போது 7 ஆண்டுகள் ஆகியும் காவிரி நீரை பெற முடியவில்லை. சமீபத்தில் கர்நாடகத்தில் ஆட்சி பொறுப்பு ஏற்பதற்கு முன்பு ஸ்ரீரங்கம் வந்து பெருமாளை வணங்கிய குமராசாமி தமிழகத்தோடு நட்புறவோடு செயல்படுவேன் என்று பேசிவிட்டு சென்றார்.

 

 

தமிழக மக்களின் ஜீவாதாரத்தை கண்டுகொள்ளாத வகையில் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. காவிரி விவகாரத்தில் கர்நாடக முதல்வர் குமாரசாமி முரணாக பேசி வருகிறார். காவிரி நீரை பெற்றுத்தர கூடிய ஆட்சியாக திமுக ஆட்சி இருக்கிறது. மதசார்பற்ற ஆட்சி அமைப்பதற்கு மக்கள் துணை நிற்க வேண்டும் என்றார்.

கோவிலுக்குள் ஸ்டாலின் வந்தால் அங்கே இருக்கும் பணியாளர்களுக்கு வழங்குவதற்கு ஏற்பாடு செய்து வைத்திருந்த வஸ்திரங்களை கோவில் உள்ள பணியாளர்களுக்கு கொடுத்தனர்.

எது எப்படியோ இடைத்தேர்தலுக்கு கூட ஸ்ரீரங்கம் கோவில் வாளாக வீதிகளுக்குள் வாராத ஸ்டாலினை மனைவி துர்கா ஸ்டாலின் அன்பில் மகேஷ், அன்பழகன், துணையோடு அழைத்து வந்துவிட்டார். இனியாவது மாற்றம் நிகழுமா என்பதை பொருத்திருந்து பார்ப்போம் என்கிறார்கள் கட்சியினர்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்