Skip to main content

டாஸ்மாக்கை நிறுத்தி னால் சாராயம் பெருகும் - அமைச்சர் சீனி பேச்சு!

Published on 04/03/2018 | Edited on 04/03/2018
seeni


கடந்த சட்டமன்ற தேர்தலில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவோ வேலைக்கு செல்லும் பெண்களுக்கு  மானியம் விலையில் ஸ்கூட்டர்  வழங்கப்படும்  என அறிவித்தார் அதுபோல் இபிஎஸ். ஒபிஎஸ் அரசு  ஜெவின் 7oவது பிறந்த நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அந்தந்த  மாவட்டங்களில் ஸ்கூட்டர் வழங்கும் விழா நடைபெற்று வருகிறது .


       அதுபோல் திண்டுக்கல்லில் வனத்துறை அமைச்சர் சீனிவாசன் கலந்து கொண்டு முதல் கட்டமாக 144 பேருக்கு 25ஆயிரம் மானியம்விலையில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு ஸ்கூட்டர் வழங்கினார் அதைதொடர்ந்து தாலிக்கு தங்கம்.தையல் மிஷின் உள்பட பல நல திட்டங்களை பெண்களுக்கு வழங்கினார். அதை தொடர்ந்து பேசிய அமைச்சர் சீனிவாசனோ.....கடந்த தேர்தலின் போது அம்மா சொன்ன வாக்குறுதியை தற்பொழுது இந்த  எடப்பாடி பழனிச்சாமி அரசு ஒருவருடம் கழித்து நிறைவேற்றி வருகிறது. 

 

இந்த மாவட்டத்திற்கு வருடத்திற்கு 3000ஆயிரம் பேருக்கு மானியவிலையில் ஸ்கூட்டர் கொடுக்க இருக்கிறோம் தற்பொழுது முதல்தவனையாக 144பேருக்கு கொடுத்து இருக்கிறோம் அதன்பின்  படிபடியாக  அனைத்து பெண்களுக்கும் வழங்கப்படும் அதுபோல் தாலிக்கு தங்கம். தையல் மிஷின்  கொடுத்து இருக்கிறோம் ஏன் தையல்மிஷினை பெண்களுக்கு  அம்மா  கொடுத்து வந்தார்கள் என்றால் கனவன் குடிகாரன இருந்தால் அதை வைத்து பெண்கள் பிழைத்து  கொள்ளட்டும் என்ற அடிப்படையில் அந்த திட்டத்தை அம்மா  கொண்டு வந்ததை நாங்கள் செயல்படுத்தி வருகிறோம் அதற்காக நீங்க தான் டாஸ்மாக் கடை நடத்தி வருகிறோம் என்று கேட்டு விடாதீர்கள்  டாஸ்மாக் கடைகளை நிறுத்தி விட்டோம் என்றுல் கள்ளசாராயம்  பெருகும் அதன்மூலம் நெறையா பேர் செத்து போய்விடுவார்கள் அதுனாலதான் டாஸ்மாக் கடைகளை  நடத்தி வருகிறோம் அதை முதலில்  தாய்மார்கள்  புரிந்து  கொள்ளவேண்டும்  அதுபொல் அவர்களை திருத்தி கொள்ள வைண்டுமே நாம திருத்தமுடியாது  புரட்சித் தலைவர்  பாடியது போல் திருடனா பார்த்து  திருந்த வேண்டும்  அவர்  அவர் வாழ்க்கை அவர் கையில்  இருக்கிறது  என்று கூறினார். இந்த விழாவுக்கு  எம்.பி. மற்றும்  எம்.எல்.ஏ. டாக்டர் பரமசிவம்.கலெக்டர் வினைய் உள்பட கட்சி பொருப்பாளர்கள் மற்றும் அதிகாரிகளுடன் பொது மக்களும் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

'இது பாராட்டத்தக்கச் செயலா;தமிழ்நாடு எங்கே போகிறது?' -அன்புமணி ராமதாஸ் 

Published on 28/01/2023 | Edited on 28/01/2023

 

 Is this a commendable act; Where is Tamil Nadu going? -Anbumani Ramadoss

 

'அதிக மது விற்பனை செய்வது பாராட்டத்தக்கச் செயலா? தமிழ்நாடு எங்கே போகிறது? மதுவிலக்கை நடைமுறைப்படுத்துங்கள்' என பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ''கரூர் மாவட்டத்தில் மிக அதிக அளவில் மது விற்பனை செய்து டாஸ்மாக் நிறுவனத்திற்கு வருவாய் தேடித் தந்ததற்காக அதன் பணியாளர்கள் 4 பேருக்கு கரூர் மாவட்ட நிர்வாகம் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி சிறப்பித்துள்ளது. சமூக ஊடகங்களில் கடும் எதிர்ப்பு எழுந்ததையடுத்து திரும்பப் பெற்றுள்ளது. இந்திய குடியரசு நாள் என்ற புனித நாளில், பாராட்டுச் சான்றிதழ் வழங்குவதற்காக கரூர் மாவட்ட நிர்வாகம் கடைபிடித்துள்ள அளவீடு அதிர்ச்சியளிக்கிறது. எதிர்ப்பு எழாமல் இருந்திருந்தால் மது விற்றவர்களுக்கு பாராட்டு சான்று வழங்கும் கலாச்சாரம் ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் நீட்டிக்கப்பட்டிருக்கக்கூடும்.

 

குடியரசு நாளில் ஒருபுறம் சென்னையில் கள்ளச்சாராய ஒழிப்பில் சிறப்பாக செயல்பட்ட 5 காவலர்களுக்கு காந்தியடிகள் விருதை முதலமைச்சர் வழங்குகிறார்; மறுபுறம் மது விற்றவர்களுக்கு கரூர் ஆட்சியர் பாராட்டி சான்றிதழ் வழங்குகிறார். இது என்ன முரண்பாடு? தமிழ்நாடு எங்கே போகிறது? டாஸ்மாக் மது விற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டதன் பின்னணி குறித்து விரிவான விசாரணைக்கு ஆணையிட வேண்டும். இத்தகைய பாவங்களுக்கு பரிகாரம் தேடவும், மக்களைக் காக்கவும் தமிழ்நாட்டில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதாக  அரசு அறிவிக்க வேண்டும்'' எனத் தெரிவித்துள்ளார்.

 

 

Next Story

கரோனா தடையை மீறி கோயிலுக்கு கும்பாபிஷேகம்; போலீஸார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு

Published on 14/06/2020 | Edited on 14/06/2020
kovil




ஊரடங்கு உத்தரவை மீறி நடைபெற இருந்த கோவில் கும்பாபிஷேகம் தடுத்து நிறுத்தப்பட்டு போலீசார் குவிக்கப்பட்டு கோயிலை பூட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

 

 

உலகையை உலுக்கிய கரோனோ அச்சுறுத்தலால் தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் திருவிழாக்கள் நடத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நாகை அருகே உள்ள பால்பண்ணைச்சேரியில் அமைந்துள்ள முனீஸ்வரன் ஆலயத்திற்கு ஊரடங்கு உத்தரவை மீறி நடைபெற இருந்த கோவில் கும்பாபிஷேகத்தை போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளனர். 
 

நாகை அடுத்துள்ள பால்பண்ணைசேரியில் அமைந்துள்ளது அருள்மிகு முனீஸ்வரன் ஆலயம். அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகளின் நம்பிக்கைக்குரிய ஆலயமாக விளங்கி வந்த அந்த கோயில் திருப்பணிகள் கடந்த ஒருவருட காலமாக நடைபெற்று திருப்பணிகள் அனைத்தும் முடிந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், லட்சுமி ஹோமம் உள்ளிட்டைவைகள் நடைபெற்று முடிந்த நிலையில் கும்பாபிஷேகம் நடைபெற இருந்தது. அதனைத் தொடர்ந்து கும்பாபிஷேகத்தை காண அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் அங்கு குவிந்தனர். தகவல் அறிந்த நாகூர் காவல் ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் ஊரடங்கு உத்தரவை மீறி நடைபெற இருந்த கும்பாபிஷேக நிகழ்ச்சியை தடுத்து நிறுத்தினர். 
 

பக்தர்களை அங்கிருந்து அப்புறப்படுத்திய போலீசார், யாகசாலை பூஜைகளை நிறுத்தியதுடன், விழாக்குழுவினரை வெளியேற்றி கோவிலை இழுத்து பூட்டினர். அதனை தொடர்ந்து கோவில் முன்பு போலீசார் குவிக்கப்பட்டு, கண்காணிப்பு கேமரா பொருந்திய வாகனம் கொண்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. 
 

நாகை அருகே ஊரடங்கு உத்தரவை மீறி நடைபெற இருந்த கோவில் கும்பாபிஷேகத்தை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.