ஒட்டப்பிடாரம் தொகுதி இடைத் தேர்தலில் நமக்கு தான் 'சீட்' என மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தார் ஆவின் சேர்மன் சின்னத்துரை. ஆனால், கடைசி நேரத்தில் மோகனுக்கு கட்சி தலைமை சீட் ஒதுக்கியதால் விரக்தியில் இருந்தார். அதேபோல், 'சீட்' கிடைக்காமல் ஏமாந்த முன்னாள் ஒன்றிய சேர்மன் ஜெயலலிதா, வேட்பாளரை மாற்றக்கோரி தர்ணா போராட்டம் நடத்தினார்.
இந்த போராட்டத்திற்கு சின்னத்துரையின் தூண்டுதலே காரணம் என்பதை தெரிந்து கொண்ட மந்திரி கடம்பூர் ராஜூ, சின்னத்துரையை கூப்பிட்டு எச்சரித்தார். இதனால், தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொள்ளாமல் சின்னத்துரை ஒதுங்கியே இருந்தார்.
இதற்கிடையே, இந்த தேர்தலில் சின்னத்துரை உள்ளடி வேலை பார்ப்பார் உளவுத்துறை நோட் போட்டு அனுப்ப, மீண்டும் கொந்தளித்த கடம்பூரார் ராஜூ, தேர்தல் முடியட்டும் சின்னத்துரையின் ஆவின் சேர்மன் பதவியை பறிக்கிறேன் என கர்ஜித்துள்ளதாக சொல்லப்படுகிறது.
இதனால், பயந்துபோன சின்னத்துரை சுகாதாரத்துறை மந்திரி விஜயபாஸ்கரிடம் புலம்பியிருக்கிறார். முதல்ல நீங்க தேர்தல் வேலையை பாருங்கள் என்று அவர் சொல்ல. இப்போது பிரச்சார வாகனத்தின் ஓரத்தில் நிற்கிறார் சின்னத்துரை. இருந்தாலும் தேர்தல் முடிந்த பிறகு கச்சேரி இருக்கிறது என கடம்பூர் ராஜூ சொல்லி இருக்கிறார் என்கிறார்கள்.