ddd

தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டை சட்டப்பேரவையில் தாக்கல் செய்திருக்கிறார் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம். பட்ஜெட்டில் துறை வாரியாக நிதி ஒதுக்கீடு செய்து அதனை அறிவித்த ஓபிஎஸ், ‘’வருகிற மே மாதம் இந்த அரசு தனது ஆட்சிக் காலத்தை நிறைவு செய்கிறது. ஆளுமைத் திறன் குறியீட்டு பட்டியலில் தமிழகம் முதலிடத்தில் இருக்கிறது. கரோனா தொற்றினை கட்டுப்படுத்தியதிலும் தமிழகம் முன்னோடியாக இருக்கிறது. மத்திய அரசின் உத்தரவுப்படி, 3.85 லட்சம் முன்களப் பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

Advertisment

கரோனா பேரிடரால் குறுகிய கால பொருளாதார இழப்பு தமிழகத்திற்கு ஏற்பட்டது. நடப்பு நிதியாண்டில் 41,417.30 கோடியாக நிதிப் பற்றாக்குறை இருக்கும். கடந்த ஆண்டை விட, நடப்பு நிதியாண்டில் நிதிப் பற்றாக்குறை அதிகரிப்பதை தவிர்க்க முடியாது. தமிழகத்திற்கு வழங்கப்படும் பேரிடர் கால நிவாரண நிதி போதுமானதாக இல்லை‘’ என்று பேரவையில் பதிவு செய்தார் ஓபிஎஸ்!

Advertisment