Skip to main content

''திமுக என்றாலே தேர்தலில் தில்லுமுல்லு'' - எடப்பாடி பழனிசாமி பேச்சு!

Published on 24/09/2021 | Edited on 24/09/2021

 

Edappadi Palanisamy's speech

 

தமிழ்நாட்டில் கடந்த 2019ஆம் ஆண்டு புதிதாக உருவாக்கப்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில், சில தினங்களுக்கு முன் தமிழ்நாடு தேர்தல் ஆணையம், விடுபட்ட மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி, அக்டோபர் 6 மற்றும் 9 தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கிறது. 

 

இந்நிலையில், அறிவிக்கப்பட்ட உள்ளாட்சித் தேர்தல் நேர்மையாக நடைபெறுமா என்ற ஐயம் பொதுமக்களிடம் இருப்பதாக தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். நேற்று (23.09.2021) திருப்பத்தூரில் தனியார் நட்சத்திர ஹோட்டலில் திருப்பத்தூர் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் உடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, ''திமுக என்றாலே தேர்தலில் தில்லுமுல்லு செய்யும் கட்சி. ஐந்து சவரனுக்கு குறைவாக அடமானம் வைத்தவர்களின் நகைக்கடன், தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் வாங்கியிருந்தாலும் தள்ளுபடி செய்யப்படும் என ஸ்டாலின் கூறினார். ஆனால் தற்போது அதை விட்டுவிட்டார். இப்போது கூட்டுறவு சங்கத்தில் வைத்த கடனை மட்டும் ரத்து செய்வோம் என்கிறார். அதுக்கும் ஏராளமான கண்டிஷனைப் போட்டுள்ளார். இதனால் கடன் தள்ளுபடி செய்யப்படுமா செய்யப்படாதா என்ற ஐயப்பாட்டிலேயே மக்கள் உள்ளனர். எனவே தேர்தலுக்கு முன்பு ஒரு பேச்சு, தேர்தலுக்கு பின்பு ஒரு பேச்சு. இதுதான் திமுகவின் நிலைப்பாடு.

 

திமுக சட்டமன்ற உறுப்பினர்களில் 15 பேர் முன்னாள் அதிமுகவினர். திமுக அமைச்சரவையில் 8 பேர் முன்னாள் அதிமுகவினர். திமுகவில் அனைவருக்கும் வயதாகிவிட்டதால் அதிமுகவில் உள்ளவர்களை விலைக்கும் வாடகைக்கும் வாங்கியுள்ளனர். திமுகவிற்கு சரியான தலைமையும், நிர்வாகத் திறமையும் இல்லை'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்