Skip to main content

பல மணி நேரம் காத்திருந்து வருத்தத்துடன் திரும்பிய விஜயகாந்த் ரசிகர்கள்..!

Published on 07/04/2021 | Edited on 07/04/2021

 

DMDK leader Vijayakanth Didn't cast his vote


தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நேற்று (06/04/2021) காலை 07.00 மணியளவில் தொடங்கியது. பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். இரவு 7 மணியுடன் வாக்குப் பதிவு நிறைவடைந்தது. இதையடுத்து, வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டு, போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டன. 

 

அதிமுக முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், திமுக முதல்வர் வேட்பாளர் மு.க. ஸ்டாலின், ம.நீ.ம. முதல்வர் வேட்பாளர் கமல்ஹாசன், நா.த.க. முதல்வர் வேட்பாளர் சீமான், அமமுக முதல்வர் வேட்பாளர் டிடிவி தினகரன், திரை நட்சத்திரங்கள் ரஜினி, அஜித், விஜய் என அனைவரும் தங்களது வாக்கினை பதிவு செய்தனர்.  

 

DMDK leader Vijayakanth Didn't cast his vote

 

இதில் அமமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேமுதிகவின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் விருகம்பாக்கம், காவேரி பள்ளியில் தனது வாக்கினை காலை பதிவு செய்தார். அதனைத் தொடர்ந்து பிற்பகல் பொழுதில் விஜயகாந்தின் மகன்கள் விஜயபிரபாகரன் மற்றும் சண்முக பாண்டியன் ஆகியோர் தங்களது வாக்கினை பதிவு செய்தனர். அப்போது அங்கு கூடியிருந்த தேமுதிகவினர் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் எப்போது வருவார் என காத்திருந்தனர். மாலை 6 மணிக்கு வருவார் என தெரிவிக்கப்பட்டிருந்தது. 

 

DMDK leader Vijayakanth Didn't cast his vote

 

ஆனால் இறுதிவரை அவர் வாக்களிக்க வரவில்லை. மேலும், அவரது உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் அவர் வரவில்லை எனும் பேச்சும் அப்பகுதியில் ஏற்பட்டது. இதில் மூட் அப்சட்டான அக்கட்சி தொண்டர்கள், ‘தேர்தல் பிரச்சாரத்திற்காக வேன்களில் சென்று தொண்டர்களை உற்சாகப்படுத்திய தலைவர், வாக்களிக்க வந்திருந்தால் இன்னும் உற்சாகமாக இருந்திருக்கும்’ என வருத்தப்பட்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்