Skip to main content

ஓரங்கட்டப்பட்ட ஓ.பி.எஸ்! அரைக் கம்பத்தில் பறந்த அதிமுக கொடி! 

Published on 23/06/2022 | Edited on 23/06/2022

 

Dindigul district ops supporters struggle

 

அதிமுக பொதுக்குழு இன்று கூட்டப்பட்டது. இந்தக் கூட்டத்தில் அனைத்து தீர்மானங்களையும் நிராகரிப்பதாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார். மேலும், இ.பி.எஸ்-ஐ ஒற்றைத் தலைமையாக கொண்டுவர பொதுக்குழு உறுப்பினர்கள் விரும்புவதாக அறிவித்தார். இதனைக் கண்டித்து ஓ.பி.எஸ் உட்பட அவரது ஆதரவாளர்கள் வெளிநடப்பு செய்தனர்.

 

இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டை அருகே மைக்கேல் பாளையத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்-க்கு ஆதரவாக அதிமுக கொடியினை அரைக்கம்பத்தில் பறக்கவிட்டு அதிமுகவினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

மைக்கேல் பாளையத்தில் உள்ள அதிமுக கிளை நிர்வாகி சகாயம் தலைமையில் சகாயராஜ், மரிய மைக்கேல், அன்புரோஸ், லாரன்ஸ் உள்ளிட்ட அதிமுகவினர் மைக்கேல் பாளையம் - திண்டுக்கல் சாலையில் ஊர்வலமாக வந்தனர். பின் அங்கிருந்த அதிமுக கொடியை அரைக்கம்பத்தில் பறக்க விட்டனர். மேலும், ஓபிஎஸ்-க்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பினர்.

 

 

Dindigul district ops supporters struggle

 

பின்னர் சாலையில் தரையில் அமர்ந்து, பொதுக்குழு கூட்டத்தில் ஓபிஎஸ் தாக்கப்பட்டதாக கூறி, அவரை அவமரியாதை செய்ததைக் கண்டித்தும் கண்டன கோஷங்களை எழுப்பி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

 

நிலக்கோட்டை தொகுதி அதிமுக எம்.எல்.ஏ தேன்மொழி சேகர் உள்ளிட்ட நிர்வாகிகள் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவு நிலையை எடுத்து இருக்கும் வேளையில், கிளைக் கழக நிர்வாகிகள் ஓபிஎஸ்-க்கு ஆதரவாக அதிமுக கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிட்ட சம்பவம் அக்கட்சியினரிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

சார்ந்த செய்திகள்