Skip to main content

"வதந்திகளுக்குப் பதிலளிக்க முடியாது" - தினேஷ் குண்டுராவ் பேட்டி!

Published on 04/03/2021 | Edited on 04/03/2021

 

congress party leader dinesh kundu rao pressmeet chennai

 

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதியின் மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி தமிழகத்தில் பரப்புரை செய்யத் தடை விதிக்கக் கோரி, பா.ஜ.க.வின் மாநிலத் தலைவர் எல்.முருகன் தேர்தல் ஆணையத்துக்குக் கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், "தேர்தல் நடத்தை விதிகளை மீறியதற்காக ராகுல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்ய வேண்டும்" என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

 

இந்த நிலையில், சென்னையில் உள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைமை அலுவலமான சத்தியமூர்த்தி பவனில், செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த காங்கிரஸ் கட்சியின் தமிழக மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், "ராகுல் மீது தமிழக மக்கள் அதிக பாசம் கொண்டிருப்பதை பா.ஜ.க.வால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. தேர்தல் நடத்தை விதிகளை ராகுல் காந்தி மீறவில்லை; அவர் மீதான புகார் தவறானது. ராகுல் காந்தி மீது, பா.ஜ.க. தரப்பில் தரப்பட்ட புகாரைத் தேர்தல் ஆணையம் நிராகரிக்கும் என நம்புகிறேன். தொகுதிப் பங்கீடு குறித்த வதந்திகள், யூகங்களுக்குப் பதிலளிக்க முடியாது. தொகுதிப் பங்கீடு தொடர்பாக மூத்த தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். மக்கள் நீதி மய்யத்துடன் காங்கிரஸ் பேசுவதாக வெளியாகும் தகவல் உண்மைக்குப் புறம்பானது. நாளை அல்லது நாளை மறுநாள் தொகுதிப் பங்கீடு இறுதியாகும்" எனத் தெரிவித்தார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

"தயாரிப்பாளரை தூக்கிலிட வேண்டும்" - தி கேரளா ஸ்டோரி பட விவகாரம் குறித்து முன்னாள் அமைச்சர் பேட்டி

Published on 09/05/2023 | Edited on 09/05/2023

 

congress leader Jitendra Awhad The Kerala Story producer should be punished in public

 

விபுல் அம்ருத்லால் ஷா தயாரிப்பில் சுதிப்தோ சென் இயக்கத்தில் அதா சர்மா, சித்தி இட்னானி உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 5 ஆம் தேதி வெளியான படம் தி கேரளா ஸ்டோரி. இப்படத்தின் டீசர் வெளியான பிறகு மத வெறுப்பைத் தூண்டும் வகையில் படம் இருப்பதாகப் பல தரப்பிலிருந்து கடும் எதிர்ப்புகள் எழுந்தன. இதனால் இப்படத்தை திரையிடத் தடை விதிக்கக் கோரி பலரும் கூறி வந்தனர். 

 

தமிழகத்தில் கடந்த 7 ஆம் தேதி மல்டிப்ளெக்ஸ் நிறுவனங்கள் அனைத்து காட்சிகளும் ரத்து செய்யப்படுவதாகவும், இனி இப்படம் திரையிடப்படாது எனத் தெரிவித்த நிலையில் மல்டிப்ளெக்ஸில் எந்த காட்சியும் திரையிடப்படவில்லை. மேலும் மேற்கு வங்கத்திலும் படத்தை திரையிடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் இப்படத்திற்கு  வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

 

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்தவரும் மகாராஷ்டிர முன்னாள் அமைச்சருமான ஜிதேந்திர அவாத், இப்படத்தை கடுமையாகச் சாடியுள்ளார். அவர் கூறுகையில், "தி கேரளா ஸ்டோரி படத்தின் தயாரிப்பாளரை பொது இடத்தில் வைத்து தூக்கிலிட வேண்டும். அவர்கள் கேரளாவின் நன்மதிப்பை மட்டும் கெடுக்காமல் அம்மாநில பெண்களையும் அவமதித்துள்ளனர். கேரளாவைச் சேர்ந்த 32,000 பெண்கள் காணாமல் போய் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதக் குழுவில் சேர்ந்துள்ளதாக காண்பிக்கிறார்கள். ஆனால் உண்மையான எண்ணிக்கை 3 தான்" எனக் கூறியுள்ளார். 

 

 

Next Story

தேர்தலுக்கு முன் போடப்பட்ட 660 சாலை ஒப்பந்தங்கள் ரத்து!

Published on 24/07/2021 | Edited on 24/07/2021

 

660 road contracts canceled before elections canceled

 

தமிழக சட்டமன்றத் தேர்தல் அறிவிப்புக்கு சில நாட்களுக்கு முன்பு இறுதிச் செய்யப்பட்ட 660 சாலை ஒப்பந்தங்களை ரத்துச் செய்து சென்னை பெருநகர மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. 

 

கடந்த பிப்ரவரி மாதம் சென்னையில் உள்ள பெருங்குடி, வளசரவாக்கம், சோழிங்கநல்லூர், அண்ணா நகர் உள்ளிட்ட மண்டலங்களில் சாலைகளை சீரமைக்க சுமார் 43 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 660 ஒப்பந்தங்கள் போடப்பட்டன. சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையராக ககன்தீப் சிங் பேடி இ.ஆ.ப. பொறுப்பேற்றப் பின்னர், இந்த ஒப்பந்தங்கள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய குழு அமைத்தார். 

 

தற்போது அந்த குழு அளித்துள்ள ஆய்வறிக்கையில், சாலை சீரமைப்பிற்கான ஒப்பந்தங்களில் உள்ள 3,200 சாலைகளும் நல்ல நிலையில் இருப்பதாகவும், தற்போதைய நிலையில் அதைச் சீரமைக்க வேண்டிய தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டிருந்ததால், ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.