Skip to main content

பதிவான ஓட்டு விவரங்களில் குளறுபடி... மறு ஓட்டுப்பதிவு நடத்த தங்க தமிழ்ச்செல்வன் மனு!

Published on 16/04/2021 | Edited on 16/04/2021

 

confusion in votes count thangathamiselvan petition to conduct polling

 

போடி தொகுதியில், மூன்று ஓட்டுச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு விவரங்களில் குளறுபடி நடந்துள்ளது, 17C படிவம் மூலம் தெரிய வந்தள்ளது. அதனால் மறு ஓட்டுப்பதிவு நடத்த வேண்டும் என போடி சட்டமன்றத் தொகுதியின் திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் தேனி மாவட்ட தேர்தல் அதிகாரியான கிருஷ்ணன் உன்னியிடம் மனு அளித்துள்ளார்.

 

அந்த மனுவில் தங்க தமிழ்ச்செல்வன் கூறியிருப்பதாவது, “போடியில் 57ஏ சிசம் மேல்நிலைப்பள்ளி ஓட்டுச்சாவடியில் 602 ஓட்டுகள் பதிவானது. எனக்கு வழங்கிய 17C படிவத்தில் 583 ஓட்டுகள் என பதிவாகி உள்ளது. இதில் 19 ஓட்டுக்கள் வித்தியாசம் உள்ளது. 197 முத்தையன் செட்டிபட்டி அரசு கள்ளர் பள்ளியில் பதிவான ஓட்டுக்கள் 538. 17C படிவத்தில் 578 என பதிவாகி உள்ளது. இதில் 40 வாக்குகள் வித்தியாசம் உள்ளது.

 

280 சீலையம்பட்டி கம்பர் நடுநிலைப்பள்ளியில் பதிவான ஓட்டு 873. ஆனால், படிவத்தில் 783 ஓட்டுகள் பதிவாகி உள்ளது. இதில் 90 ஓட்டுகள் வித்தியாசம் உள்ளது. இந்த ஓட்டுப்பதிவு குளறுபடிகள் ஊர்ஜிதமானல் போடி தொகுதிக்கு மறு ஓட்டுப்பதிவு நடத்த தேர்தல் கமிஷன் உத்தரவிட வேண்டும். ஏப்ரல் 14ஆம்தேதி ஓட்டு எண்ணும் மையத்தில் மின்சார தடை ஏற்பட்டது.

 

அப்போது, தொடர்ந்து 13 நிமிடங்கள் போடி தொகுதிக்கான அறையின் டிவி மானிட்டர் மட்டும் இயங்கவில்லை. யுபிஎஸ், ஜெனரேட்டர் உதவியுடன் 24 மணி நேரமும் மின்சாரம் இயங்குவதை உறுதி செய்ய வேண்டும். அதுபோல் மையத்தைச் சுற்றிலும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்க வேண்டும். கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் சேர்க்கைக்காக தனி வழி ஏற்படுத்த வேண்டும்” என அந்த மனுவில் கூறியிருக்கிறார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

காரும் - லாரியும் மோதி விபத்து; மாவட்ட கல்வி அதிகாரிக்கு நேர்ந்த சோகம்!

Published on 17/03/2024 | Edited on 17/03/2024
Car-Lorry Collision incident Tragedy happened to the district education officer

காரும் - மினி லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் மாவட்ட கல்வி அதிகாரி உள்பட இருவர் பலியான சம்பவம்  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே உள்ள பொம்மிநாயக்கன்பட்டி விளக்கு என்ற பகுதியில் கார் ஒன்று சென்று கொண்டிருந்துள்ளது. அதே சாலையில் மின் லாரி ஒன்றும் எதிர் திசையில் வந்துள்ளது. அப்போது எதிர்பாராத விதமாக காரும் - மினி லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் காரில் இருந்த தேனி மாவட்ட தனியார் பள்ளிகளுக்கான மாவட்ட கல்வி அதிகாரி சங்குமுத்தையா மற்றும் அவரது கார் ஓட்டுநரும் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்.

இந்த விபத்தில் சிக்கிய மினி லாரி ஓட்டுநர் படுகாயங்களுடன் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். காரும் - மினி லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்தில் சிக்கி கல்வி அதிகாரி சங்குமுத்தையாவும், அவரது கார் ஓட்டுநரும் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

“பா.ஜ.க.வுடன் அ.ம.மு.க. கூட்டணி” - டி.டி.வி. தினகரன் உறுதி

Published on 11/03/2024 | Edited on 11/03/2024
tTV Dinakaran confirmed for AMmK alliance with BJP

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் கடந்த ஒரு மாத காலமாகத் தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வுகளை நடத்தி வருகிறது. விரைவில் தேர்தல் அறிவிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது. கூட்டணிக் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடுகள் பற்றிய பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது. ஒரு சில கட்சிகள் வேட்பாளர்களையும் அறிவித்து வருகின்றன.

இதற்கிடையே பா.ஜ.க. கூட்டணியில் டி.டி.வி. தினகரனின் அ.ம.மு.க. இணைய இருப்பதாகவும், அதற்கான இறுதிக்கட்ட பேச்சுவார்த்தைகள் தொடங்கி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்நிலையில், திருச்சியில் அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “கூட்டணி தொடர்பாக பா.ஜ.க.விடம் கடந்த 6 மாதங்களாக பேசிக் கொண்டிருக்கிறோம். எனவே பா.ஜ.க.வுடன் - அ.ம.மு.க. கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளது.

பா.ஜ.க. கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவை அ.ம.மு.க. அளிக்கும். எந்த உறுத்தலும் இல்லாமல் பா.ஜ.க.வுடன் அ.ம.மு.க. கூட்டணி அமைக்கிறது. எங்களது கோரிக்கைகளை ஏற்கனவே எழுத்துப்பூர்வமாக கொடுத்துவிட்டோம். பா.ஜ.க.வின் வெற்றிக்கு அணில் போல உதவியாக இருப்போம். தாமரை சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என்று பா.ஜ.க., அ.ம.மு.க.வை நிர்ப்பந்திக்கவில்லை. எத்தனை தொகுதி, எந்தெந்த தொகுதி என்பது குறித்து எல்லாம் பிரச்சனை கிடையாது. எங்களின் தேவை என்ன என்பது பா.ஜ.க.வுக்கு தெரியும்” எனத் தெரிவித்துள்ளார்.