திருச்சி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி, நகராட்சித் தேர்தலில் போட்டியிடுவார் விண்ணப்பிக்க வருமாரு அழைப்புவிடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் அவர், ‘நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான விருப்ப மனு வருகின்ற 24-11-2021 முதல் 30-11-2021 வரை காலை 10 மணி முதல் சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள வி.என்.நகர், திருச்சி தெற்கு மாவட்டக் கழக அலுவலகத்தில் வழங்கப்பட உள்ளது.
விண்ணப்பப் படிவத்தை ரூ. 10 மட்டும் செலுத்தி மாவட்ட அலுவலகத்தில் பெற்று, பூர்த்தி செய்த விண்ணப்பங்களை கீழே குறிப்பிட்டுள்ள கட்டணத்துடன் மாவட்ட அலுவலகத்தில் 30-11-2021 அன்று மாலை 5 மணிக்குள் ஒப்படைக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.
போட்டியிட விருப்பமுள்ளவர்கள்:
மாமன்ற உறுப்பினர் - ரூ. 10,000
நகர்மன்ற உறுப்பினர் - ரூ. 5,000
பேரூராட்சி உறுப்பினர் - ரூ. 2,500
வைப்புத் தொகையாக கட்ட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
‘ஆதிதிராவிடர் மற்றும் பெண்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள வார்டுகளில் போட்டியிடுவோர் மேற்படி கட்டணத்தில் பாதித் தொகையை மட்டும் செலுத்த வேண்டும். போட்டியிட விருப்பமுள்ளவர்கள் தாங்களே நேரில் வந்து மனுவைப் பெற்றுக்கொள்ளவும். நேரில் பெற்றுக்கொள்ளும் மனுக்கள் மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும்’ என அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.