BJP started election campaign in Vilathikulam

அதிமுக - பாஜக கூட்டணியை பாஜக தலைவர்கள் உறுதிப்படுத்தியிருந்தாலும், பாஜக போட்டியிடும் தொகுதிகள் இன்னும் அதிகாரப்பூர்வமாக அடையாளம் காட்டப்படவில்லை.

Advertisment

இருப்பினும் தென் மாவட்டங்களில் சில முக்கிய தொகுதிகளை அதிமுகவிடமிருந்து பெற வேண்டும்என்பதில் உறுதியாக இருக்கிறது பாஜக. அந்த வகையில் பாஜக குறி வைக்கும் தொகுதிகளில் முக்கியமானது, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள விளாத்திக்குளம்.

Advertisment

இந்த சட்டமன்ற தொகுதியில்,பாஜக சத்தமில்லாமல் தேர்தல் பணிகளை செய்து வருகிறதாம். அ.தி.மு.க. அதிகமுறை வெற்றிபெற்ற இந்தத் தொகுதியில், பா.ஜ.க மேலிடத்தில் அதிக செல்வாக்குடைய அமர்பிரசாத் ரெட்டி என்பவர் போட்டியிடப் போவதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

இந்தத் தொகுதியிலிருக்கும் ரெட்டியார் சமுதாய தலைவர்களைச் சந்தித்து, மினி தேர்தல் பிரசாரத்தையே அமர்பிரசாத் ரெட்டி ஆரம்பித்து விட்டராம். அதனால் தூத்துக்குடி மாவட்ட அ.தி.மு.க.வினர் அதிர்ச்சியடைந்திருக்கின்றனர்.