Skip to main content

'இது தமிழகத்திற்கு செய்யும் துரோகம்'-'த.வா.க' வேல்முருகன் ஆவேசம்!

Published on 27/08/2021 | Edited on 27/08/2021

 

'This is a betrayal of Tamil Nadu'-velmurugan

 

தமிழக-கர்நாடக எல்லையில் மேகதாது அணை கட்டுவது தொடர்பாக கர்நாடக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதேபோல் தமிழக அரசு சார்பிலும் மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதோடு, தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அண்மையில் மத்திய நீர்வளத் துறை அமைச்சரை சந்தித்து இது தொடர்பாக பேசியிருந்தார். இந்நிலையில் கர்நாடக முதல்வராக இருந்த எடியூரப்பா அண்மையில் பதவி விலகிய நிலையில் பசவராஜ் பொம்மை கர்நாடகாவின் முதல்வராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து காவிரியில் மேகதாது அணைக் கட்டுவதில் கர்நாடக அரசு உறுதியாக இருப்பதாக அவர் தெரிவித்திருந்தார். இதில் எவ்வித சமரசத்திற்கும் இடம் இல்லை என்றும் அவர் தெரிவித்திருந்த நிலையில், மேகதாது அணை விவகாரம் குறித்து மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங்  ஷெகாவத்தை   கர்நாடக முதல்வர்  பசவராஜ் பொம்மை கடந்த 25 ஆம் தேதி நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

 

'This is a betrayal of Tamil Nadu'-velmurugan

 

இந்நிலையில் மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசுக்கு சாதகமாக ஒன்றிய அரசு செயல்படக் கூடாது என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''கர்நாடகாவின் மேகதாது திட்ட அறிக்கையை காவிரி மேலாண்மை ஆணையத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள ஒன்றிய   அரசு முயற்சித்து வருகிறது. அறிக்கையை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள ஒன்றிய அரசு முயற்சிப்பது தமிழகத்திற்கு செய்யும் துரோகம். மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசுக்கு சாதகமாக ஒன்றிய அரசு செயல்படக் கூடாது'' எனத்தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்