Skip to main content

அழிவை நோக்கிச் செல்கின்றனவா அம்மா உணவகங்கள்? - கமல் வேதனை!   

Published on 23/10/2021 | Edited on 23/10/2021

 

amma restaurants heading towards destruction? - Kamal

 

நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் 'அழிவை நோக்கிச் செல்கின்றனவா அம்மா உணவகங்கள்?' என்ற தலைப்பில் ட்விட்டரில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 

அந்த அறிக்கையில், 'ஏழை, எளிய மக்களுக்குப் பசியாற்று மையங்களாக அம்மா உணவகங்கள் செயல்படுகின்றன. தமிழகத்தில் செயல்படும் அம்மா உணவகங்களால் ஈர்க்கப்பட்டு மற்ற மாநிலங்களும் இதுபோன்ற திட்டத்தைக் கொண்டுவர முன்வருகின்றன. திமுக அரசும் அம்மா உணவகத்தைக் கைவிடும் எண்ணமில்லை எனக் கூறியிருந்தது. ஆனால் சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் இரவு நேர உணவு முறையில் மாற்றம் செய்துள்ளதாகவும், பணியாட்களைக் குறைத்து வருவதாகவும் வெளியாகும் செய்திகள் கவலையைத் தருகிறது.

 

இதற்கு அம்மா உணவகங்கள் நட்டத்தில் இயங்குவதே காரணம் எனச் சொல்லப்படுகிறது. சென்னை மாநகராட்சி தனது வருவாயைப் பெருக்கிக்கொள்ள பல வழிகள் இருக்கையில், சிறிய நட்டத்தை காரணம் காட்டி இத்தகைய மக்கள் நலத் திட்டங்களைச் சிதைப்பது அரசுக்கு அழகல்ல. இந்த திட்டத்தின் கீழ் பலன்பெறும் பணியாளர்கள், பயனாளர்கள் என அனைவருமே சமூகத்தின் அடித்தட்டில் இருப்பவர்கள் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்' எனத் தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்