Published on 27/07/2021 | Edited on 27/07/2021
டெல்லி சென்ற அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர்கள் எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம் இருவரும் பிரதமர் மோடியை நேற்று (26.07.2021) நேரில் சந்தித்துப் பேசினார்கள். சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, "காவிரி, கோதாவரி நதிகள் இணைப்பது, தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல், தமிழகத்திற்கு அதிகப்படியான தடுப்பூசி வழங்க வேண்டும்" என்று கோரிக்கை விடுத்ததாக்கத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இன்று சென்னையில் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த ஓபிஎஸ், ''பிரதமரைச் சந்தித்ததில் அனைத்து நலன்களும் அடங்கும்'' எனத் தெரிவித்துள்ளார். அண்மையில் சசிகலா அதிமுகவை கைப்பற்றுவதாக ஆடியோக்கள் வெளியிட்டு வரும் நிலையில் அனைத்து நலன்களும் அடங்கும் என்ற ஓபிஎஸ்-ஸின் பேச்சு அரசியல் வட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.