Published on 14/05/2021 | Edited on 14/05/2021

உளுந்தூர்பேட்டை தொகுதியில் உள்ளது திருநாவலூர் ஒன்றியம். இதில் ஏற்கனவே அதிமுக ஒன்றியச் செயலாளராக இருந்தவர் வண்டிப்பாளையம் ராஜா. இவர் தமிழக அளவில் அம்மா சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர் சங்கத்தின் நிறுவனராகவும் தலைவராகவும் இருந்துவருகிறார்.
அப்படிப்பட்ட ராஜா, உளுந்தூர்பேட்டையில் தற்போது வெற்றிபெற்றுள்ள திமுக எம்எல்ஏ மணிகண்ணனை ஆதரித்தும், முதல்வராக பதவியேற்ற ஸ்டாலின் அவர்களை வாழ்த்தியும் போஸ்டர் ஓட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அதில் "பணநாயகம் எப்போதும் வெல்லாது. பணத்தால் மக்களை விலைக்கு வாங்க முடியாது. ஜனநாயகம் வெல்லும் என்பதற்கு உதாரணம் மணிகண்ணன் வெற்றி" என்று குறிப்பிட்டுள்ளார்.
இப்படி அதிமுக பிரமுகர் ஒருவர் திமுக எம்எல்ஏவைப் பாராட்டி போஸ்டர் ஒட்டியுள்ள சம்பவம் உளுந்தூர்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.