அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை தான் என எடப்பாடி பழனிசாமி தரப்பும், இரட்டைத் தலைமை தான் என ஓ.பன்னீர்செல்வம் தரப்பும் மாறிமாறி அணி திரட்டிக் கொண்டிருக்கும் நிலையில், வரும் ஜூன் 23- ஆம் தேதி அன்று நடைபெறவுள்ள பொதுக்குழுவுக்கான ஏற்பாடுகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளராக இபிஎஸ் நியமிக்கப்படுவாரா என்று நாளை நடக்கவிருக்கும் பொதுக்குழுவில் தெரிந்துவிடும் என்ற பட்சத்தில், எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பல்வேறு நிர்வாகிகள் தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.
ஓபிஎஸ்க்கு இருந்த மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு எண்ணிக்கை 6 ஆக சரிந்துள்ளது. தற்பொழுது வரை 5 மாவட்டச் செயலாளர்கள் ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவு எனும் நிலைப்பாட்டில் உள்ளனர். வைத்தியலிங்கம். மனோஜ் பாண்டியன், தர்மர், தேனி சையது கான், கன்னியாகுமரி அசோகன் ஆகிய 5 பேர் ஓபிஎஸ் ஆதரவு நிலைப்பாட்டில் உள்ளனர்.
உட்கட்சி மோதல் அதிகரித்துள்ள நிலையில் ஓபிஎஸ், ஜெயலலிதா நினைவிடத்திற்கு செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.இது உறுதிப்படுத்தப்படாத தகவல் என்ற நிலையிலும் அவர் ஜெயலலிதா நினைவிடத்திற்கு செல்ல இருப்பதாக வெளியான தகவலால் அதிமுக தொண்டர்கள் மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஜெ.நினைவிடத்தில் குவிந்து வருகின்றனர்.