vishwa table tennis player

Advertisment

தமிழகத்தைச் சேர்ந்த இளம் டேபிள் டென்னிஸ் வீரரான விஸ்வா தீனதயாளன் சாலை விபத்தில் உயிரிழந்தார். அவருக்கு வயது 18.

83ஆவது சீனியர் தேசிய டேபிள் டென்னிஸ் போட்டியில் பங்கேற்பதற்காக கௌகாத்தியில் இருந்து ஷில்லாங் செல்லும் வழியில் இந்த சாலை விபத்தானது நடந்துள்ளது. விஸ்வா தீனதயாளன் பயணித்த கார் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது எதிரே அதிவேகத்தில் வந்த சரக்கு லாரி மோதி இந்த விபத்து நடந்ததாகக் கூறப்படுகிறது. இந்த விபத்தில் விஸ்வா தீனதயாளன் மற்றும் அவரது கார் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

காரில் பயணித்த சக வீரர்கள் மற்றும் லாரி ட்ரைவர் உள்ளிட்டோர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Advertisment

இன்று தொடங்கும் 83ஆவது சீனியர் தேசிய டேபிள் டென்னிஸ் போட்டியில் பங்கேற்பதற்காக சென்று கொண்டிருந்த இளம் வீரர் சாலை விபத்தில் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.