Skip to main content

சந்தனப்பொட்டு வைத்ததால் பள்ளியிலிருந்து மாணவி நீக்கமா??!! வைரலாகிய தந்தையின் பதிவு!!

Published on 09/07/2018 | Edited on 09/07/2018

 

mathrasa

 

 

 

கேரளாவில் உம்மர் என்பவரின் மகள் ஹீனா கேரளாவில் உள்ள மதராசா பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார். சிறுவயதிலிருந்தே படிப்பு, ஆடல் ,பாடல்,நடிப்பு என அனைத்திலும் ஆர்வம் கொண்ட மாணவி ஹீனா ஒரு குறும்படத்தில் சந்தனப்பொட்டு வைத்து நடித்தார் என்ற காரணத்தினால் பள்ளியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என்று அவரது தந்தை கூறியுள்ளார்.

 

இது தொடர்பாக அவரது தந்தை அவரது முகப்புத்தகத்தில் எனது மகள் பள்ளியிலும் சரி மதராசாவிலும் சரி நல்ல திறமைகளை வெளிக்காட்டி வருகிறாள். மதராசா சார்பில் நடைபெற்ற பொதுதேர்வில்கூட 5-ஆம் இடத்தில் தேர்ச்சி பெற்றுள்ளாள் . ஆனால் ஒரு குறும்படத்தில் சந்தனப்பொட்டு வைத்து நடித்துவிட்டார் என்ற காரணத்திற்காக அவர் இப்போது மதராசாவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். நல்லவேளை கல்லெறிந்து கொல்லும் தண்டனையை அவளுக்கு கொடுக்கவில்லை என பதிவிட்டுள்ளார்.

 

 

இந்த பதிவு சில நொடிகளிலேயே வைரலாகியது. அதனை தொடர்ந்து மதராசாவையே எதிர்த்துள்ளார் மாணவியின் தந்தை என அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்தது. ஆனால் சிலர் இது இஸ்லாம் மதத்தை கெடுக்கும் செயல்பாடு எனவும் பதிவிட்டனர். 

 

இதனையடுத்து தனது அடுத்த பதிவில் தான் தனது மதத்தை மதிக்கிறேன். மேலும் மனித உணர்வுகளை நேசிக்கிறேன். இதை வைத்து மத பூசலை உருவாக்க திட்டமிடாதீர்கள் என்றும் உருக்கமாக கூறியுள்ளார். 

சார்ந்த செய்திகள்

Next Story

தனியார் கல்லூரி பேருந்து மோதி 6 வயது சிறுவன் உயிரிழப்பு

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
6-year-old boy lost their live in private college bus crash

நாமக்கல்லில் தனியார் கல்லூரி பேருந்து மோதி ஆறு வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஈரோடு சாலையில் உள்ள  தோட்ட வாடி கிராமத்தில் உள்ள பேருந்து நிலைய பகுதியில் கூட்டப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த சதீஷ் என்பவர் இருசக்கர வாகனத்தில் தன்னுடைய 6 வயது மகனுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்திற்குப் பின்புறம் வந்த தனியார் கல்லூரி பேருந்து எதிர்பாராத விதமாக மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே 6 வயது சிறுவன் தலை நசுங்கி உயிரிழந்தார். தந்தை சதீஷ்குமாரின் கை முறிந்து துண்டானது.

இந்தச் சம்பவம் அங்குப் பரபரப்பை ஏற்படுத்த, உடனடியாக அங்கு வந்த போலீசார் சிறுவனின் உடலைக் கைப்பற்றி  பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அந்தப் பகுதிகளில் காலை நேரத்தில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பதாகவும், அந்த நேரத்தில் தனியார் பேருந்துகள் மிகுந்த வேகத்துடன் செல்வதால் சாலைத் தடுப்பு, வேகத்தடை ஆகியவற்றை அமைத்துக் கொடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திருச்செங்கோடு காவல் நிலைய போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தனியார் கல்லூரி பேருந்து மோதி 6 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

ஹிந்து மாணவிகளுடன் பேசிய இஸ்லாமிய மாணவருக்கு நேர்ந்த கொடூரம்!

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
Incident happened to the Muslim student who spoke with the Hindu girls

மகாராஷ்டிரா மாநிலம், புனே பகுதியில் சாவித்ரிபாய் புலே என்ற பிரபல பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இந்தப் பல்கலைக்கழகத்தில், இந்தியாவில் மட்டுமல்லாது, வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இந்தப் பல்கலைக்கழகத்தில் படிக்கும், 19 வயது இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர், ஹிந்து மாணவிகளுடன் பேசியதாகவும், மதத்தின் பேரில் பிரச்சாரம் செய்ததாகவும் கூறி, அடையாளம் தெரியாத நபர்கள் சிலர், அந்த மாணவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இந்தச் சம்பவத்தால் பல்கலைக்கழகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவர் தரப்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. பின்னர், போலீசார் விசாரணையில், ‘பாதிக்கப்பட்ட இஸ்லாமிய மாணவர் சாவித்ரிபாய் புலே பல்கலைக்கழகத்தில் திறன் மேம்பாட்டு பிரிவில் படித்து வருகிறார். அவர் பல்கலைக்கழகத்தில் உள்ள ஆண்கள் விடுதியில் சுமார் ஒன்பது மாதங்களாக தங்கியுள்ளார். இந்த நிலையில், அவர் ஏப்ரல் 7ஆம் தேதி மதியம் 2 மணியளவில், தனது நண்பர்கள் மற்றும் தோழிகளுடன் கேண்டீனில் மதிய உணவு சாப்பிட்டுள்ளார்.

அப்போது, 6 மாணவர்கள் அந்த கேண்டீனுக்கு மூன்று இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர். அங்கு வந்தவர்கள், பாதிக்கப்பட்ட இஸ்லாமிய மாணவரிடம் ஆதார் அட்டை கேட்டு வாக்குவாதம் செய்தனர். அப்போது, அவர் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதை அறிந்ததும், மதம் தொடர்பாக தவறாகப் பேசி அவரைத் தாக்கியுள்ளனர்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.