Skip to main content

நூறு நாள் வேலைக்காக இந்த பட்ஜெட்டில் ரூ. 5 ஆயிரம் கோடி உயர்த்தி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது...

Published on 02/02/2019 | Edited on 02/02/2019

 

vv

 

2019-20-ம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டில் 2006-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கு இந்த ஆண்டில் ரூ.  60 ஆயிரம் கோடியென மத்திய அரசால் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 

 

2005-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் எனும் நூறு நாள் வேலை திட்டம் கிராமப்புற ஏழை மக்களுக்கான நூறு நாளுக்கான வேலையை உறுதி செய்வதற்காக உருவாக்கப்பட்டது. அப்போது இதற்காக ரூ. 37,588 கோடி ஒதுக்கப்பட்டது. அதன்பின் வருடாவருடம் குறிப்பிட்ட தொகையை மத்திய அரசு உயர்த்தி வந்தது. அதன்படி கடந்தவருடம் இதற்காக ரூ. 55 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டது. தற்போது இத்திட்டத்திற்கு ரூ. ஐந்து கோடி அதிகரித்து ரூ. 60 ஆயிரம் கோடியென மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பெட்ரோல், டீசல் விலை உயர்வு - நிதித்துறைச் செயலாளர் விளக்கம்!

Published on 23/02/2021 | Edited on 23/02/2021

 

tn assembly interium budget 2021 finance secretary pressmeet

 

சென்னை வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கில் இன்று (23/02/2021) காலை 11.00 மணிக்கு சட்டப்பேரவையின் கூட்டம் கூடியது. அதைத் தொடர்ந்து, 2021 - 2022 ஆம் நிதியாண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை தமிழக துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பேரவையில் தாக்கல் செய்து உரையாற்றினார். 

 

இதனிடையே, சென்னை தலைமைச் செயலகத்தில் இடைக்கால பட்ஜெட் குறித்து செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கமளித்த தமிழக நிதித்துறைச் செயலாளர் கிருஷ்ணன், "தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி நடப்பு நிதியாண்டில் 2.02% ஆக இருக்கும். தமிழகத்தின் வருவாய் 18% குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. தேசிய அளவில் பொருளாதார வளர்ச்சி எதிர்மறையாக இருக்கும் நிலையில், தமிழகத்தில் பொருளாதார வளர்ச்சி நேர்மறையாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஒருபக்கம் வருவாய் குறைந்து, கூடுதல் செலவு ஏற்பட்டதால் வருவாய் பற்றாக்குறை அதிகரித்துள்ளது. அடுத்த நிதியாண்டில் அரசின் கடன் வாங்கும் அளவு குறையும். நடப்பு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு, புதிய வரி ஏதும் விதிக்காமல் வருவாய் கணக்கீடு இருக்கும். தமிழக அரசின் கடன் வாங்கும் அளவு மத்திய அரசின் வரையறுக்கப்பட்ட அளவிற்குள் கட்டுக்குள் இருக்கிறது. மாநிலத்தின் மொத்தக் கடனானது 15- வது நிதிக்குழு அளித்த குறியீட்டிற்குள்தான் உள்ளது. கடன் வாங்குவதில், ஜிடிபி மற்றும் 15 வது நிதிக்குழு அளித்த வரம்பை தமிழகம் மீறவில்லை. 

 

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு மாநில அரசின் வரி விதிப்பு காரணம் அல்ல. மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான வரியை உயர்த்தியதே, விலை உயர காரணம். மக்களுக்கு சாதகமாக இருக்கும் முறையிலேயே கடந்த ஆண்டு வரியை மாற்றியமைத்தோம். 2020 - 2021 நிதியாண்டில் டாஸ்மாக் மூலம் ரூபாய் 30,000 கோடி வருவாய் கிடைத்துள்ளது. பயிர்க்கடன் தள்ளுபடிக்கான எஞ்சிய ரூபாய் 7,000 கோடி நிதி, வரும் ஆண்டுகளில் ஒதுக்கீடு செய்யப்படும். ஏற்கனவே உள்ள ஆசிரியர்களைக் கொண்டு 6 முதல் 10- ஆம் வகுப்பு வரை கணினி ஆசிரியர் பணியிடம் நிரப்பப்படும். 2021 - 2022 இல் பள்ளிக்கல்வித்துறைக்கு ரூபாய் 35,668 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார். 

 

 

Next Story

'விபத்து, ஆயுள்காப்பீடு திட்டம்' - இடைக்கால பட்ஜெட்டில் அறிமுகம்!

Published on 23/02/2021 | Edited on 23/02/2021

 

tn assembly interim budget deputy cm opaneerselvam announced peoples

 

2021 - 2022 ஆம் நிதியாண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்து உரையாற்றிய தமிழக துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், "2021 ஜனவரி வரை மாநில போக்குவரத்துக் கழகத்திற்கு ரூபாய் 3,717.36 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறைக்கு இடைக்கால பட்ஜெட்டில் ரூபாய் 229.37 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைக்காக ரூபாய் 13,967.58 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டத்திற்காக ரூபாய் 2,634 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சத்துணவுத் திட்டத்துக்காக இடைக்கால பட்ஜெட்டில் ரூபாய் 1,953.98 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகரை தனித்தன்மை வாய்ந்ததாக மாற்றும் திட்டத்திற்கு ரூபாய் 3,140 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழக கைத்தறித் துறைக்கு இடைக்கால பட்ஜெட்டில் ரூபாய் 1,224.26 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. உயர்கல்வி உதவித்தொகை திட்டத்திற்காக ரூபாய் 1,932.19 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

 

எதிர்பார்க்கப்பட்டதை விட 17.64% வரி வருவாய் குறைந்துள்ளது. ஆதி திராவிடர் குடியிருப்பு பகுதிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரூபாய் 100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2021- ஆம் ஆண்டு ஜூன் மாதத்துடன் முடிவடையும் அரசு ஊழியரின் புதிய மருத்துவக் காப்பீடு திட்டம் நீட்டிக்கப்படும். ஒட்டுமொத்த காப்பீடு ரூபாய் 4 லட்சத்திலிருந்து 5 லட்சமாக அதிகரிக்கப்படும். குறிப்பிட்ட சிகிச்சைக்களுக்கான காப்பீடு ரூபாய் 7.5 லட்சத்திலிருந்து ரூபாய் 10 லட்சமாக உயர்த்தப்படும். ஜெயலலிதா விரிவான விபத்து மற்றும் ஆயுள் காப்பீடு திட்டத்தை தமிழக அரசு தொடங்கியுள்ளது. எல்.ஐ.சி. - யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனத்துடன் இணைந்து புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது அரசு. புதிய திட்டத்திற்கான முழு நிதியையும் தமிழக அரசே ஏற்றுக்கொள்ளும்.

 

குடும்பத் தலைவரின் இயற்கை மரணத்திற்கு ரூபாய் 2 லட்சம் காப்பீட்டுத் தொகை வழங்கப்படும். குடும்பத் தலைவரின் விபத்து மரணத்திற்கு ரூபாய் 4 லட்சம், நிரந்தர இயலாமைக்கு ரூபாய் 2 லட்சம் காப்பீடு வழங்கப்படும். புதிய திட்டத்தால் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள தகுதியான 55.67 லட்சம் குடும்பங்கள் பயன்பெறும். படிப்படியாக அமைய உள்ள 2,000 அம்மா மினி கிளினிக்கிற்காக ரூபாய் 144 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களுக்கான புதிய மருத்துவக் காப்பீடு திட்டம் சலுகைகளுடன் நீட்டிக்கப்படும். மேட்டுப்பாளையத்தில் தேயிலை தொழில் குழுமம், விருதுநகரில் ஜவுளித்தொழில் குழுமம் உருவாக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 2021 - 2022 இல் நிதிப் பற்றாக்குறைக்கு நிதி வழங்கும் வகையில் ரூபாய் 84,686.75 கோடி கடன் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த கடன் அளவான ரூபாய் 85,454 கோடியில், நிகர கடனான ரூபாய் 84,686.75 கோடி திரட்டப்படும்" எனத் தெரிவித்தார்.