Skip to main content

தாமதமாக வந்த 'வேகமான ரயில்'... அதிருப்தியில் பயணிகள்...

Published on 18/02/2019 | Edited on 18/02/2019

 

tyrtytry

 

நாட்டின் முதல் அதிவேக ரயிலான வந்தே பாரத் ரயில் இன்று வணிக ரீதியிலான முதல் பயணத்தை தொடங்கியது. சென்னை ஐ.சி.எப். தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட இந்த ரெயிலுக்கு ‘வந்தே பாரத்’ எனப் பெயரிடப்பட்டது. கடந்த வாரம் வெள்ளிக்கிழமை டெல்லியில் நடந்த விழாவில் பிரதமர் மோடி ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் ரெயிலை கொடியசைத்து தொடங்கி வைத்தார். சோதனை ஓட்டமான முதல் பயணத்தில் உத்தரபிரதேசத்தின் வாரணாசி நகரிலிருந்து டெல்லிக்கு திரும்பியபோது நடுவழியில் பழுதானது. பின்னர் பழுது நீக்கப்பட்டு டெல்லி வந்தடைந்தது.

இந்நிலையில், ‘வந்தே பாரத்’ ரெயில் வர்த்தக ரீதியான தனது முதல் பயணத்தை இன்று துவங்கியது. இதில் முதல் நாள், முதல் பயணத்தின் போதே ரெயில் ஒரு மணி நேரம், இருபது நிமிடங்கள் தாமதமாக சென்று சேர்ந்தது. இதனால் பயணிகள் கடும் அதிருப்தி அடைந்தனர். ரெயில் பாதையில் பனிமூட்டம் அதிகமாக இருந்ததால், ரெயில் மெதுவாக சென்றதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இதுபற்றி பயணிகள் கூறும்போது வரும் காலத்தில், ரெயில் சரியான நேரத்தில் இயக்கப்படும் என நம்புவதாகவும்,  பயணம் மிகவும் சவுகரியமாக இருந்ததாகவும் தெரிவித்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழகத்திற்கு மற்றொரு வந்தே பாரத் ரயில் சேவை?

Published on 05/03/2024 | Edited on 05/03/2024
Another Vande Bharat train service to Tamil Nadu

இந்திய ரயில்வே துறையில் சொகுசு மற்றும் அதிவேக ரயில்களாக வந்தே பாரத் ரயில்கள் இருக்கும் என முதன் முதலில் அறிமுகம் செய்யப்பட்டபோது தெரிவிக்கப்பட்டது. நாட்டின் முக்கியமான வழித்தடங்களில் இந்த ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னை பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. வந்தே பாரத் ரயில்கள் நீலம் - வெள்ளை நிறம் மற்றும் காவி - சாம்பல் நிறத்திலும் இருக்கும் வகையில் இருக்கும் வகையில் வரை இயக்கப்பட்டு வருகிறது.

அதன்படி தமிழகத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் - மைசூர், சென்னை சென்ட்ரல் - கோவை, சென்னை சென்ட்ரல் - விஜயவாடா, கோயம்புத்தூர் - பெங்களூரு கண்டோன்மென்ட், சென்னை எழும்பூர் - திருநெல்வேலி ஆகிய நகரங்கள் இடையே வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மேலும் ஒரு வந்தே பாரத் ரயில் சேவை தமிழகத்தில் தொடங்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. மதுரை - பெங்களூரு இடையே வந்தே பாரத் ரயில் சேவை அடுத்த வாரம் தொடங்கப்பட உள்ளதாகத் தெற்கு ரயில்வே சார்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. இந்த ரயில் திண்டுக்கல், கரூர், சேலம், ஓசூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. 

Next Story

சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயில் நாகர்கோவில் வரை நீட்டிப்பு!

Published on 25/12/2023 | Edited on 25/12/2023
 Extension of Chennai-Nellai Vande Bharat train to Nagercoil

இந்தியா ரயில்வே துறையில் சொகுசு மற்றும் அதிவேக ரயில்களாக வந்தே பாரத் ரயில்கள் இருக்கும் என முதன் முதலில் அறிமுகம் செய்யப்பட்ட போது தெரிவிக்கப்பட்டது. மேலும் நாட்டின் முக்கியமான வழித்தடங்களில் இந்த ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னை பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது.

இந்த சூழலில் சென்னை எழும்பூர் - திருநெல்வேலி இடையே கடந்த செப்டம்பர் 24 ஆம் தேதி முதல் வந்தே பாரத் விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஜனவரி 4 ஆம் தேதி முதல் ஜனவரி 25 ஆம் தேதி வரை வியாழக்கிழமைகளில் திருநெல்வேலி - சென்னை இடையே இயக்கப்படும் வாராந்திர வந்தே பாரத் ரயில் நாகர்கோவில் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பின் படி வந்தே பாரத் ரயில் சென்னை எழும்பூரில் இருந்து அதிகாலை 05.15 மணிக்குப் புறப்பட்டு மதியம் 02.10 மணிக்குத் நாகர்கோவிலுக்குச் சென்றடையும். அதே சமயம் மறு மார்க்கமாக நாகர்கோவிலில் இருந்து மதியம் 02.50 மணிக்கு புறப்படும் இந்த ரயில்  சென்னை எழும்பூருக்கு இரவு11:45 மணிக்குச் சென்றடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.