இந்தியாவில் தினசரி கரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வந்த நிலையில், தற்போது குறையத் தொடங்கியுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 2 லட்சத்து 55 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கே கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை தெரிவித்தது.
இந்தநிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, ஜம்மு காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், பஞ்சாப், ஹரியானா, உத்தரகாண்ட், டெல்லி, லடாக், உத்தரப்பிரதேசம் மற்றும் சண்டிகர் ஆகிய ஒன்பது மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்த சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் கரோனா பரவல் குறித்து ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மன்சுக் மாண்டவியா, இசஞ்சீவனி போன்ற தொலைபேசி வழியாக ஆலோசனை வழங்கும் திட்டங்களில் கவனம் செலுத்துமாறும், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்களைத் தீவிரமாக கண்காணிக்குமாறும் மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களை அறிவுறுத்தியுள்ளார்.