Skip to main content

ஹேக் செய்யப்பட்ட மத்திய அமைச்சகத்தின் ட்விட்டர் கணக்கு!

Published on 12/01/2022 | Edited on 12/01/2022

 

twitter

 

மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் ட்விட்டர் கணக்கு இன்று காலை ஹேக் செய்யப்பட்டுள்ளது. ட்விட்டர் கணக்கை ஹேக் செய்தவர்கள், அந்த கணக்கின் பெயரை எலான் மஸ்க் என மாற்றியதோடு, "சிறப்பான  பணி" என சில ட்விட்டுகளையும் பதிவிட்டுள்ளனர். இந்தநிலையில் தற்போது ஹேக் செய்யப்பட்ட ட்விட்டர் கணக்கு மீட்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

அண்மையில் பிரதமர் மோடியின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டு, பிட்காயினை இந்தியா அங்கீகரித்துவிட்டது என பதிவிடப்பட்டிருந்ததும், அதன்பின்னர் பிரதமரின் கணக்கு மீட்டெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

18 ஓடிடி தளங்கள் முடக்கம் - மத்திய அமைச்சகம் அதிரடி

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
central government banned 18 ott platforms in india

சமீப காலமாக ஓடிடி-யின் வளர்ச்சி அதிகமாக இருப்பதால், பல படங்கள் நேரடியாக அதில் வெளியாகின்றன. இந்த சூழலில் ஓடிடியில் சென்சார் இல்லாததால் அதிக வன்முறை மற்றும் ஆபாச காட்சிகள் இடம் பெறுவதாக ஒரு குற்றச்சாட்டு ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது. மேலும் சமூக வலைத்தளங்கள் மற்றும் சில செயலிகளிலும் அதிக ஆபாச வீடியோக்கள் உலா வரும் சூழலில், தற்போது இது தொடர்பாக ஓடிடி, செயலிகள், இணையதளங்கள் மீது நடவடிக்கை எடுக்க தொடங்கியுள்ளது தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகம்.

அந்த வகையில் ஆபாச காட்சிகள் அதிகம் இடம்பெற்றிருந்த 18 ஓடிடி தளங்கள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. இதில் டிரீம் பிலிம்ஸ், வூவி, யெஸ்மா, அன்கட் ஆடா, ட்ரை ஃபிளிக்ஸ், எக்ஸ் பிரைம், நியான் எக்ஸ், விஐபி பேஷரம்ஸ், ஹன்டர்ஸ், ரேபிட் எக்ஸ்ட்ராமூட், நியூஃப்லிக்ஸ், மூட்எக்ஸ், மொஜிப்பிலிஸ், ஹாட் ஷாட்ஸ் விஐபி, ஃபியூகி, சிகூஃப்லிக்ஸ், பிரைம் ப்ளே  ஆகியவை உள்ளன. மேலும் ஆபாச காட்சிகளை ஒளிபரப்பி வந்த 10 செயலிகள் மற்றும் 57 வலைத்தள பக்கங்களும் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. 
 

central government banned 18 ott platforms in india

பலமுறை எச்சரித்தும் தகவல் தொழில்நுட்ப சட்டத்தை மீறும் வகையில் ஆட்சேபத்திற்குரிய காட்சிகளை இடம்பெறச் செய்ததால் நடவடிக்கை இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முகநூல் பக்கத்தில் 12 கணக்குகள், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 17 கணக்குகள், எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் 16 கணக்குகள், யூடியூபில் 12 கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளன. இதில் தடைசெய்யப்பட்ட ஒரு ஓடிடி தளத்தில் மட்டும் ஒரு கோடிக்கும் அதிகமான பதிவிறக்கங்கள் நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமின்றி கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து மட்டும் 50 லட்சம் பேர் இந்த செயலியை பதிவிறக்கம் செய்திருப்பதாக கூறப்படுகிறது. 

Next Story

விவசாயிகளின் அக்கவுண்ட்டை முடக்க மத்திய அரசு உத்தரவு; எக்ஸ் நிறுவனம் அதிருப்தி

Published on 22/02/2024 | Edited on 22/02/2024
 Company X is dissatisfied for Central government order to freeze pages

தலைநகர் டெல்லியை நோக்கி, 12 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி, பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த விவசாயிகள் பேரணியாகச் செல்கின்றனர். விவசாயிகளுக்கும் ஹரியானா மாநில காவல்துறையினருக்கும் இடையே பஞ்சாப், ஹரியானா எல்லைப் பகுதிகளில் கடும் மோதல் நீடித்துவருகிறது.பஞ்சாப் ஹரியானா எல்லையான ஷாம்பு எல்லைப் பகுதியில், ஏற்கெனவே விவசாயிகள் மீது தொடர்ந்து காவல்துறையினர் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசி வருகின்றனர்.

பஞ்சாப் - ஹரியானாவின் மற்றொரு எல்லையான காணுரியில், நேற்று (21-ஆம் தேதி) காலை முதல் தொடர்ந்து கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசும் ஹரியானா போலீசார், விவசாயிகளைக் கலைத்து வருகின்றனர். காவல்துறையினரால் வீசப்பட்ட கண்ணீர் புகைக் குண்டு வெடித்து, பஞ்சாப் மாநிலம் பதிண்டாவைச் சேர்ந்த சுப்கரன் சிங் (வயது 24) என்னும் இளம் விவசாயி உயிரிழந்தார். இது தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே, போராட்டத்தில் உள்ள விவசாயிகள் மீது போலீசார் நடத்தும் கண்ணீர்புகை குண்டு வீசும் வீடியோக்களை விவசாயிகள் பலர் தங்களது சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர். இந்த நிலையில், இந்திய அரசின் உத்தரவின் பேரில் சில கணக்குகள் மற்றும் பதிவுகள் நீக்கப்பட்டதாக எக்ஸ் (ட்விட்டர்) இன்று (22-02-24) தெரிவித்துள்ளது. 

இது குறித்து, எக்ஸ் (ட்விட்டர்) நிறுவனத்தின் உலக அரசுகள் விவகார பிரிவு வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது, ‘இந்திய அரசின் உத்தரவுகளுக்கு இணங்க, குறிப்பிட்ட கணக்குகள் மற்றும் பதிவுகளை இந்தியாவில் மட்டும் நிறுத்தி வைப்போம். இந்த நடவடிக்கையை எடுத்ததில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. மேலும், கருத்து சுதந்திரம் என்பது இந்த பதிவுகளுக்கும் நீட்டிக்கப்பட வேண்டும். 

எங்கள் நிலைப்பாட்டிற்கு இணங்க இந்திய அரசின் தடை உத்தரவுகளை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட ரிட் மேல்முறையீடு நிலுவையில் உள்ளது. எங்கள் கொள்கையின்படி, பாதிக்கப்பட்ட பயனர்களுக்கு இந்த நடவடிக்கைகள் குறித்த அறிவிப்பையும் நாங்கள் வழங்கியுள்ளோம். சட்டக் கட்டுப்பாடுகள் காரணமாக, இந்திய அரசின் நிர்வாக உத்தரவுகளை வெளியிட முடியவில்லை. ஆனால், வெளிப்படைத்தன்மையின் அடிப்படையில் இந்த உத்தரவை பொதுவெளியில் வைப்பது அவசியம் என்று நாங்கள் நம்புகிறோம்’ என்று தெரிவித்துள்ளது.