Published on 29/05/2022 | Edited on 29/05/2022
இந்தியா மற்றும் வங்கதேசம் இடையே இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இன்று (29/05/2022) மீண்டும் ரயில் சேவை தொடங்குகிறது.
கரோனா பரவல் காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொல்கத்தா மற்றும் வங்கதேசத்தில் உள்ள நகரங்கள் இடையேயான ரயில் சேவை கடந்த 2020- ஆம் ஆண்டு மார்ச் மாதம் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில், நோய்த்தொற்று பரவல் கட்டுப்படுத்தப்பட்டதால், ரயில் சேவையை மீண்டும் தொடங்க ஏற்கனவே முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, வங்கதேசத்தில் இருந்து டாக்கா, மைத்திரி, கொல்கத்தா எக்ஸ்பிரஸ், கொல்கத்தாவில் இருந்து குணாவந்தன் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று (29/05/2022) முதல் இயக்கப்படவுள்ளது.