Skip to main content

திருப்பதியில் இன்று ஒருநாள் மட்டும் இலவச தரிசனத்திற்கு அனுமதி!

Published on 06/09/2020 | Edited on 06/09/2020

 

TIRUPATI TEMPLE FREE DARSHAN ALLOWED TODAY

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று (06/09/2020) ஒருநாள் மட்டும் பக்தர்கள் இலவச தரிசனம் மேற்கொள்ள தேவஸ்தானம் அனுமதி அளித்துள்ளது.

 

கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் செப்டம்பர் 30- ஆம் தேதி வரை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இலவச தரிசனம் ரத்து என தேவஸ்தானம் அறிவித்திருந்தது. இந்நிலையில், இலவச தரிசனத்திற்கு அனுமதிக்கக் கோரி அலிபிரியில் இரவு முழுவதும் பக்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

இதையடுத்து, இன்று ஒருநாள் மட்டும் திருப்பதி கோயிலில் இலவச தரிசனம் மேற்கொள்ள தேவஸ்தானம் அனுமதி அளித்துள்ளது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஏழுமலையானை தரிசனம் செய்த முகேஷ் அம்பானி... நன்கொடை அளித்தது எவ்வளவு?

Published on 16/09/2022 | Edited on 16/09/2022

 

How much did Mukesh Ambani who visited the Seven Mountain Elephant donate?

 

திருப்பதி ஏழுமலையான் கோயில் அன்னதானத் திட்டத்திற்காக ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி, 1 கோடியே 11 லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளார். 

 

ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி, தனது குடும்பத்தினருடன் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். பிறகு, அவருக்கு ரங்கநாயபுரம் மண்டபத்தில் வேத பண்டிதர்கள் வேத மந்திரங்கள் முழங்க ஆசி வழங்கினர். பின்னர், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அன்னதான திட்டத்திற்காக முகேஷ் அம்பானி 1 கோடியே 11 லட்சம் ரூபாயை நன்கொடையாக வழங்கினார். 

 

அதைத் தொடர்ந்து, முகேஷ் அம்பானிக்கு திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது. 

 

Next Story

திருப்பதி தேவஸ்தானத்திடம் மன்னிப்பு கோரிய விக்னேஷ் சிவன்!

Published on 11/06/2022 | Edited on 11/06/2022

 

Vignesh Sivan apologizes to Tirupati Devasthanam

 

நடிகை நயன்தாரா திருப்பதி ஏழுமலையான் கோயில் விதிகளை மீறி மாடவீதிகளில் காலணியுடன் நடந்ததாக சர்ச்சை எழுந்த நிலையில், அவரது கணவர் விக்னேஷ் சிவன் மன்னிப்புக் கோரியுள்ளார்.

 

திரைப்பட இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து மணம் முடித்துள்ள நடிகை நயன்தாரா, தனது கணவருடன் ஆந்திர மாநிலத்தில் உள்ள மிகவும் பிரசித்திப் பெற்ற ஏழுமலையான் கோயிலில் தரிசனம் செய்தார். ஏழுமலையான் கல்யாண உற்சவ சேவையில் பங்கேற்ற நயன்தாரா- விக்னேஷ் சிவன் தம்பதி பின்னர் மாடவீதிகளில் நடந்து சென்றனர்.

 

அப்போது, கோயில் விதிகளை மீறி காலணி அணிந்த படியே மாடவீதிகளில் நயன்தாரா நடந்து சென்றார். அப்போது, திருமணத்துக்கு பிந்தைய வெட்டிங் சூட் எனப்படும் படப்பிடிப்பையும் நடத்தினார்.  இதற்கு உரிய அனுமதி பெறவில்லை என்றும், விதிகளை மீறி காலணியுடன் நடந்து சென்றது குறித்தும் சர்ச்சை எழுந்தது.

 

இதையடுத்து, சட்ட நிபுணர்களின் ஆலோசனை படி, நடிகை நயன்தாரா மீது நடவடிக்கை எடுக்கப்படுமென திருப்பதி திருமலை தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், நயன்தாராவின் கணவரான விக்னேஷ் சிவன், திருப்பதி திருமலை தேவஸ்தானத்திற்கு மன்னிப்பு கடிதம் அனுப்பியுள்ளர். அறியாமல் தவறு செய்துவிட்டதாக அக்கடிதத்தில் அவர்  குறிப்பிட்டு, மன்னிப்பு கோரியுள்ளார்.