ஜம்மு - காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பரிவான் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளதாக நேற்று அப்பகுதி போலீஸ் மற்றும் பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது. அத்தகவலைத் தொடர்ந்து, போலீசார் மற்றும் பாதுகாப்புப் படையினர் இணைந்து அதிரடி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அதில் தடை செய்யப்பட்ட ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்துடன் தொடர்புடைய பாகிஸ்தானை அடிப்படையாக கொண்ட பயங்கரவாதியை சுட்டு கொன்றனர். பாபர் பாய் என்ற பெயரை கொண்ட அந்த பயங்கரகாதி கடந்த 2018ம் ஆண்டு முதல் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளது தெரிய வந்துள்ளது. இந்த என்கவுண்ட்டருக்கு முன்பு, குடிமக்களை பாதுகாப்புடன் இராணுவ வீரர்கள் வேறு பகுதிக்கு கொண்டு சென்றனர். இந்த துப்பாக்கி சண்டையில் போலீஸ் அதிகாரி ஒருவர், 3 ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்களில் 2 பேர் காயமடைந்தனர்.
இந்நிலையில், இன்று ஜம்மு - காஷ்மீர், குப்வாரா அருகே தர்போராவில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான அவர்களிடமிருந்து துப்பாக்கிகள், தோட்டாக்கள், கையெறி குண்டுகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.