Skip to main content

ஏர் இந்தியாவை வாங்கும் முயற்சியில் டாடா குழுமம்!

Published on 15/09/2021 | Edited on 15/09/2021

 

air india

 

இந்திய அரசுக்குச் சொந்தமான ஏர் இந்தியா நிறுவனம், கடுமையான கடனில் சிக்கித் தவிக்கிறது. தற்போது 43,000 கோடி கடனில் சிக்கித் தவிக்கும் அந்த நிறுவனத்தைக் கடந்த 2018 ஆம் ஆண்டே விற்க மத்திய அரசு முயற்சி செய்தது. ஆனால் அப்போது ஏர் இந்தியாவை வாங்க யாரும் முன்வரவில்லை.

 

இந்தநிலையில் சில மாதங்களுக்கு முன்பு ஏர் இந்தியா நிறுவனத்தை விற்பதற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது. இதனையடுத்து ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்க டாடா குழுமம் ஏலத்தொகையை சமர்ப்பித்துள்ளது. ஏலத்தொகையை சமர்ப்பிப்பதற்கு இன்றே கடைசி நாள் என்பது குறிப்பிடத்தக்கது. டாடா குழுமத்தைத் தவிர வேறு சில நிறுவனங்களும் ஏல தொகையை சமர்ப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.

 

1932 ஆம் ஆண்டு டாடா குழுமம் ஆரம்பித்த டாடா ஏர்லைன்ஸே 1946 ஆம் ஆண்டு ஏர் இந்தியா எனப் பெயர் மாற்றப்பட்டது. இதன்பின்னர் 1953 ஆம் ஆண்டு ஏர்இந்தியா அரசுடைமையாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


 

சார்ந்த செய்திகள்

Next Story

போர் பதற்றம்; விமான சேவை ரத்து!

Published on 07/10/2023 | Edited on 07/10/2023

 

air india Flight to Tel Aviv canceled

 

இஸ்ரேல் - பாலஸ்தீனத்திற்கு இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையே இருக்கும் காசா பகுதி தன்னாட்சி பெற்ற பகுதியாக இருந்து வருகிறது. இந்த காசா பகுதியைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஆயுதக் குழுக்களான ஹமாஸ் அமைப்பை, இஸ்ரேல் பயங்கரவாத இயக்கமாக அறிவித்துள்ளது. மேலும் இந்த அமைப்பு பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகச் செயல்படுவதாக இஸ்ரேல் குற்றம்சாட்டி வருகிறது.

 

இஸ்ரேல் - பாலஸ்தீனம் இரு நாடுகளுக்கு நடுவில் காசா இருப்பதால் அங்கு வாழும் மக்கள் எப்போதும் உயிர் பயத்துடனேயே இருந்து வருகின்றனர். இந்த நிலையில்தான் காசாவில் செயல்பட்டு வரும் ஹமாஸ் அமைப்பினர் இன்று காலை, 20 நிமிடத்தில் 5 ஆயிரம் ஏவுகணைகளை இஸ்ரேலை நோக்கிச் செலுத்தித் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதற்குப் பதிலடி தரும் வகையில், ஹமாஸ் படையினர் மீது இஸ்ரேலும் தாக்குதல் நடத்தி வருகிறது.

 

இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு நடத்திய ஏவுகணை தாக்குதலில் 100 பேர் உயிரிழந்ததாகவும், 908 பேர் படுகாயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதே சமயம் ஹமாஸ் படையினர் மீது இஸ்ரேல் நடத்திய விமானத் தாக்குதலில் பாலஸ்தீனியர்கள் 198 பேர் உயிரிழந்துள்ளதாகவும், சுமார் 1600க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் போர் பதற்றம் காரணமாகப் பயணிகளின் பாதுகாப்பு கருதி டெல்லியிலிருந்து டெல் அவிவ் செல்லும் விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. 

 

 

Next Story

தோழியை விமானி அறையில் அனுமதித்த விவகாரம்; ஏர் இந்தியாவுக்கு அபராதம்

Published on 13/05/2023 | Edited on 13/05/2023

 

dgca fine thirty lakhs for air india limited dubai to delhi flight

 

கடந்த பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி துபாயில் இருந்து டெல்லி வந்த ஏர் இந்தியா விமானத்தில் விமானியாக இருந்த ஒருவர் தனது பெண் தோழியை விமான பைலட்டின் கட்டுப்பாட்டு அறையான காக்பிட்டில் அமர வைத்துள்ளார். இது குறித்த புகார் ஒன்று விமான போக்குவரத்து இயக்குநரகத்தில் (DGCA) அளிக்கப்பட்டது.

 

அதனைத் தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தியதில் இதில் சம்பந்தப்பட்ட பெண் ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் ஊழியர் ஆவார். இருப்பினும் இந்த சம்பவம் நடந்த அன்று அந்த பெண் விமானத்தில் பயணியாக சென்றது தெரியவந்தது. பாதுகாப்பு விதிகளை மீறிய இந்த விவகாரத்தில் ஏர் இந்தியா நிறுவனம் முறையான விசாரணை நடத்தி உரிய நடவடிக்கைகளை எடுக்கத் தவறிவிட்டது என விமான போக்குவரத்து இயக்குநரகம் தெரிவித்துள்ளது. இதனால் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு 30 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும், விமான பயணி ஒருவரை காக்பிட்டிற்குள் அனுமதித்த விமானியின் இந்த செயல் விமான போக்குவரத்து இயக்குநரகத்தின் விதிகளுக்கு எதிரானது. விமானி தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்திய குற்றத்திற்காக மூன்று மாதங்களுக்கு பணியிடை நீக்கம் செய்யப்படுவதுடன் அவரது விமான ஓட்டுநர் உரிமமும் 3 மூன்று மாதக் காலத்திற்கு ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தின் போது விமானியின் இந்த விதிமீறலை தடுக்காமல் இருந்த துணை விமானிக்கும் விமான போக்குவரத்து இயக்குநரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.