
கன்னடத் திரையுலகில் போதைப்பொருள் புழக்கத்தில் உள்ளதாகக் குற்றசாட்டுகள் எழுந்ததால்கன்னட திரையுலகினர்அதிர்ச்சியில் உள்ளனர். இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில்,ஜெயநகர் ஆர்.டி.ஓ அலுவலகத்தில் ஆய்வாளராக பணியாற்றி வந்த ரவிசங்கர் என்பவரைகைது செய்தது போலீஸ். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தமிழ் மற்றும் கன்னட படங்களில் நடித்து பிரபலமடைந்த 'ராகினி திவேதி' என்பவருக்கு இந்த விவகாரத்தில் தொடர்பு உள்ளது என்பது தெரியவந்தது.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட நடிகை விளக்கமளிக்க காவல்துறை சம்மன் அனுப்பி இருந்த நிலையில், அவரது வீட்டிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனையடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் அவரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் போதைப்பொருள் விவகாரம் தொடர்பாக தமிழ்ப் பட நடிகை ராகினி திவேதி அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் 'நிமிர்ந்து நில்','அறியான்' ஆகிய தமிழ்ப் படங்களில் நடித்தவர் ஆவார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)