
இந்திய அரசியல் சட்டப்படி ஆணின் திருமண வயது 21 ஆகவும், பெண்ணுக்கு 18 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் ஆணுக்கும், பெண்ணுக்கும் வேறு வேறு திருமண வயது என்பது பாலின சமன்பாட்டிற்கு எதிராகவுள்ளது என பாஜக வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாயா டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். மேலும் ஆண், பெண் இருவருக்கும் ஒரே வயதை திருமண வயதாக நிர்ணயிக்க வேண்டும் எனவும் அவர் தனது மனுவில் கோரியிருந்தார்.
இதேபோல், ராஜஸ்தானைச் சேர்ந்த அப்துல் என்பவரும், அம்மாநில உயர்நீதிமன்றத்தில், திருமண வயதில் பாலின வேறுபாடு கூடாது எனக் கோரி வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். இதனையடுத்து பாஜக வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாயா, இந்த இரண்டு வழக்குகளையும் உச்சநீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டுமென உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், வழக்குகளை உச்சநீதிமன்றத்திற்கு மாற்றுவது குறித்து பதிலளிக்கும்படி மத்திய அரசுக்கு நோட்டிஸ் அனுப்பி உத்தரவிட்டது.