The son who left his birth mother on the road... the old woman who feels sorry!

Advertisment

வயது முதிர்ந்த தாயை கோவிலுக்கு அழைத்துவந்த நபர் சாலையிலேயே தவிக்கவிட்டுவிட்டு சென்ற சம்பவம் கர்நாடகாவில் நிகழ்ந்துள்ளது.

கர்நாடக மாநிலம் கொப்பல் அருகே ஹுலிக்கம்மா கோவிலில் 80 வயது தாயுடன் இளைஞர்ஒருவர் சாமி தரிசனம் செய்ய வந்த நிலையில் சாலையிலேயே தாயை பரிதவிக்க விட்டுவிட்டு சென்றுள்ளார். இதனால் எங்கே செல்வது என தெரியாமல் தவித்த மூதாட்டி அதேபகுதியில் சுற்றித்திரிந்துள்ளார். இந்நிலையில் நேற்று பசி மயக்கம் ஏற்பட்டு கீழே விழுந்தார். உடனே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மூதாட்டிக்கு உணவு கொடுத்ததோடு அதிகாரிகளுக்கு இது தொடர்பாக தகவல் கொடுத்தனர். அங்கு வந்த அதிகாரிகள் மூதாட்டியிடம் நடத்திய விசாரணையில் அவரது பெயர் ஹாசம்பி என்பதும் மகனால் கூட்டிவரப்பட்டு பின்னர் சாலையில் விட்டுச்செல்லப்பட்டதும் உறுதி செய்யப்பட்டது. தற்பொழுது அந்த மூதாட்டி தன்னார்வலர்கள் உதவியுடன் கொப்பல் பகுதியில் உள்ள முதியோர் இல்லத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டார்.