Skip to main content

'நிறவெறியை தூண்டும்' - இந்தியர்களுக்கான இங்கிலாந்தின் கட்டுப்பாடுகளுக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!

Published on 21/09/2021 | Edited on 21/09/2021

 

sasi tharoor jairam ramesh

 

கரோனா தொற்று பரவல் தற்போது உலகத்தையே ஆட்டிப்படைத்து வருகிறது. இதனால் உலகின் பல்வேறு நாடுகள், வேறு நாடுகளிலிருந்து வருபவர்களுக்குப் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துவருகின்றன. இங்கிலாந்து அரசும் அவ்வாறு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துவருகிறது.

 

இந்தநிலையில், இங்கிலாந்து அரசின் புதிய அறிவிப்பு ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்காவில் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களும், ஐக்கிய அரபு அமீரகம், இந்தியா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் தடுப்பூசி செலுத்திகொண்டர்வர்களும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களாகவே கருதப்பட்டு 10 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும், அவர்களுக்கு கரோனா பரிசோதனையும் செய்யப்படும் என்றும் இங்கிலாந்து அறிவித்துள்ளது. மேலும், அக்டோபர் 4ஆம் தேதி முதல் இந்தப் புதிய விதிமுறைகள் அமலுக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்தப் புதிய விதிமுறைகளால், இரண்டு தடுப்பூசிகளை செலுத்திக்கொண்ட இந்தியர்கள் இங்கிலாந்து சென்றாலும் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்பதால் இங்கிலாந்தின் அறிவிப்பு இந்தியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தின் இந்த அறிவிப்புக்கு காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "இந்த விதிமுறைகள் காரணமாக நான் கேம்பிரிட்ஜ் யூனியனில் நடைபெற இருந்த ஒரு விவாதத்திலிருந்து வெளியேறிவிட்டேன். மேலும், எனது புத்தகத்தின் இங்கிலாந்து பதிப்பான ‘தி பேட்டில் ஆஃப் பிலாங்கிங்’கின் வெளியீட்டு நிகழ்ச்சிகளிலிருந்தும் வெளியேறிவிட்டேன். முற்றிலும் தடுப்பூசி போடப்பட்ட இந்தியர்களைத் தனிமையில் இருக்குமாறு கூறுவது குற்றம். பிரிட்டிஷ்காரர்கள் மதிப்பாய்வு செய்கிறார்கள்" என தெரிவித்துள்ளார்.

 

அதேபோல் மற்றொரு காங்கிரஸ் எம்.பி. ஜெய்ராம் ரமேஷும் இங்கிலாந்தின் புதிய விதிமுறைகளுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர், "கோவிஷீல்ட் முதலில் இங்கிலாந்தில்தான் தயாரிக்கப்பட்டது என்பதை வைத்துப் பார்க்கையில் இங்கிலாந்தின் விதிமுறை மிகவும் விநோதமானது. மேலும், சீரம் நிறுவனம் அந்த நாட்டிற்கும் தடுப்பூசிகளை வழங்கியுள்ளது. இது இனவெறியைத் தூண்டும்" என தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“பிரதமர் மோடி ஆட்சியில் தமிழ்நாட்டில் சிறு, குறு தொழில்களுக்கு பேரழிவு” - ஜெய்ராம் ரமேஷ் குற்றச்சாட்டு

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Jairam Ramesh alleges Damage for small and micro businesses under Prime Minister Modi's rule

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதே போன்று புதுச்சேரியிலும் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வந்த நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இந்த நிலையில், காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், பா.ஜ.க மீதும், பிரதமர் மோடி மீதும் கடுமையாக குற்றச்சாட்டை வைத்துள்ளார். இது குறித்து ஜெய்ராம் ரமேஷ் தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “பா.ஜ.க ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, தமிழ்நாடு மற்ற மாநிலங்களை விட 10 லட்சத்திற்கும் அதிகமான குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் (எம்எஸ்எம்இ) என்ற செழிப்பான சுற்றுச்சூழல் அமைப்பைப் பெருமைப்படுத்தியது. பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, மற்றும் திட்டமிடப்படாத கொரோனா கால ஊரடங்கு ஆகிய மும்முனை தாக்குதலால் MSME சுற்றுச்சூழல் அமைப்பை அழித்தது.

இதனை, ராகுல் காந்தி கடந்த பத்தாண்டுகளாக தொடர்ந்து முன்னிலைப்படுத்தி வருகிறார். மேலும், ஏப்ரல் 12 ஆம் தேதி கோயம்புத்தூரில் நடைபெற்ற இந்தியப் பேரணியின் மெகா பேரணியின் போது அவர் மீண்டும் வலியுறுத்தியது போல், மாநிலத்தின் தொழில்துறை மையமான கோவை பகுதியில் உள்ள எம்எஸ்எம்இ என்னும் மையத்தின் தவறான நிர்வாகத்தால் தத்தளிக்கின்றன. பணப்புழக்கத்தை அதிகம் நம்பியிருக்கும் கொங்குநாட்டின் MSMEகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. திருப்பூரில் ஏற்பட்ட திடீர் பொருளாதார சீர்குலைவைத் தாங்க முடியாமல் 1,000 சிறு தொழிற்சாலைகள் மூடப்பட்டன.

தமிழ்நாட்டில் உள்ள  எம்.எஸ்.எம்.இ.களுக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கம் கொடுத்த இரண்டாவது அடி ஜி.எஸ்.டி ஆகும். மிக சிக்கலான வரி விதிப்பு முறை அவசரமாக கொண்டு வரப்பட்டது. பெரிய நிறுவனங்கள் அவற்றின் பயனுள்ள வரி விகிதத்தை 27% லிருந்து 28% ஆகக் கண்டாலும், MSMEகள் அவற்றின் பயனுள்ள வரி விகிதத்தை முந்தைய ஆட்சியை விட இரு மடங்காகக் கண்டன. 2019 ஆம் ஆண்டளவில், தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 50,000 தொழில் நிறுவனங்கள் மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. 2017-18ல் மட்டும் 5.19 லட்சத்துக்கும் அதிகமானோர் வேலை இழந்துள்ளனர். 

மோடி அரசின் மோசமான நிர்வாகத்தினால் கொங்கு வட்டாரத்தில் இன்னும் சிறு, குறு தொழில்கள் பாதிப்பில் இருந்து மீளவில்லை. மோடி என்ற தனிமனிதர் ஏற்படுத்திய பணமதிப்பிழப்பு என்ற பேரிழப்பால் பொருளாதார நடவடிக்கையே முடங்கிப் போய்விட்டது. தொழிலாளர்களுக்கு சிறு, குறு தொழில் நிறுவனங்களால் ஊதியம் வழங்க முடியாத நிலையால் பொருள் நுகர்வும் முடங்கிப் போனது. நடைமுறை மூலதனத்தை நம்பியே செயல்படும் சிறு, குறு தொழில் நிறுவனங்கள், பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன” என்று குறிப்பிட்டுள்ளார்.  

Next Story

இந்தியாவின் சுழல் கூட்டணியால் ஆட்டம் கண்ட இங்கிலாந்து

Published on 07/03/2024 | Edited on 09/03/2024
England were played by India's spinning alliance

இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது டெஸ்ட் போட்டி இமாச்சலப் பிரதேசத்தின் தரம்சாலா மைதானத்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஸ்டோக்ஸ் முதலில் பேட் செய்ய தீர்மானித்தார். இந்திய அணியில் அறிமுக வீரராக தேவ்தத் படிக்கல் சேர்க்கப்பட்டார்.

முதலில் களம் இறங்கிய கிராவ்லி, டக்கெட் இணை நிதானமாக ஆடத் தொடங்கியது. டக்கெட் 27 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்து, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போப் 11 ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேறினார். சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த கிராவ்லி அரை சதம் கடந்து 79 ரன்களில் ஆட்டம் இழந்தார். பேர்ஸ்டோ 29 ரன்களில் வெளியேறினார். கடந்த ஆட்டத்தில் ஃபார்முக்கு வந்த நட்சத்திர ஆட்டக்காரர்  ஜோ ரூட் 24 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார்.

England were played by India's spinning alliance

கேப்டன் ஸ்டோக்ஸ் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். அடுத்து வந்த வீரர்களில்  ஃபோக்ஸ் 24, தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். மார்க் வுட், ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோர் டக் அவுட் ஆகி வெளியேறினார். இந்திய அணியின் சுழற்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து 218 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

சிறப்பாக பந்து வீசிய குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவருக்கு அடுத்தபடியாக இந்தியாவின் சுழல் ஜாம்பவான் அஸ்வின் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஜடேஜா ஒரு விக்கெட் எடுத்தார். இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 8 ஓவர்களில் 26 ரன்களுடன் ஆடி வருகிறது. ரோஹித் 20, ரன்களுடனும், ஜெய்ஸ்வால் 6 ரன்களுடனும் ஆடி வருகின்றனர்.

வெ.அருண்குமார்