சொத்துக்குவிப்பு வழக்கில்நான்காண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு, தண்டனை அனுபவித்த சசிகலா இன்று (27.01.2021) காலை10.30மணிக்கு விடுதலையாக உள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில்இருந்த சசிகலாவுக்கு, கடந்த20 ஆம்தேதி உடல்நலக்குறைவு ஏற்பட்டு, பின்னர் அவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டிருந்தது. தற்பொழுது கரோனாதொற்று நீங்கியிருந்தாலும் தொடர்ந்து அவருக்குவிக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நான்காண்டு கால சிறைவாசத்திலிருந்து இன்று காலை10.30மணிக்கு சசிகலாவிடுதலையாக இருக்கிறார்.
தற்பொழுதுபரப்பன அக்ரஹாரா சிறைத்துறை அதிகாரிகள்மற்றும்போலீசார்விக்டோரியா அரசு மருத்துவமனைக்குப் புறப்பட்டனர். சிறைத்துறை கண்காணிப்பாளர் லதாதலைமையிலான போலீசார், சசிகலாவிடம் கையெழுத்துபெற உள்ளனர். அதேபோல்சசிகலாவின்வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியனும் மருத்துவமனைக்கு வருகைதந்துள்ளார்.அதேபோல் விடுதலையாகும் சசிகலாவை காண விக்டோரியா மருத்துவமனையின் வெளியே அவரதுஆதரவாளர்கள், தொண்டர்கள் குவித்துள்ளனர்.