Skip to main content

ஷாருக்கான் மகனை கைது செய்த அதிகாரி சென்னைக்கு பணி மாற்றம் 

Published on 31/05/2022 | Edited on 31/05/2022

 

Sameer Wankhede

 

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கான் தொடர்பான போதைப்பொருள் விவகார வழக்கை சரியாக விசாரிக்காத போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரி சமீர் வான்கடே சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

 

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானும், அவரது நண்பர்களும் கடந்த அக்டோபர் மாதம் மும்பை சொகுசுக் கப்பலில் போதைப்பொருள் பயன்படுத்தியதாகக் கைதுசெய்யப்பட்டனர். மும்பை மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரியாக அப்போது பணியாற்றிய சமீர் வான்கடே இந்தக் கைது நடவடிக்கையில் ஈடுபட்டார். இந்த வழக்கு விசாரணையின்போது ஆர்யன் கானை விடுவிக்க ஷாருக்கானை மிரட்டிப் பணம் கேட்டதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அப்பொறுப்பிலிருந்து சமீர் வான்கடே விடுவிக்கப்பட்டார். அண்மையில் இந்த வழக்கின் சிறப்பு விசாரணைக்குழு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதில் ஆர்யன்கான் உட்பட ஆறு பேரின் பெயர்கள் இடம்பெறவில்லை. இதையடுத்து, அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரமில்லாததால் ஆறு பேரும் இந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.

 

ஆரம்பத்தில் இந்த வழக்கை விசாரித்த சமீர் வான்கடே, சரியாக விசாரிக்காத காரணத்தால்தான் ஆர்யன்கான் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், சமீர் வான்கடே மீது நடவடிக்கை எடுக்கும்படி மத்திய அரசு கேட்டுக்கொண்டது.இந்த நிலையில், சமீர் வான்கடே வருவாய் புலனாய்வு பிரிவில் வரி செலுத்துவோர் சேவை இயக்குநரகத்தின் இயக்குநராக சென்னைக்கு பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘ஆக்சன்’ சொல்ல காத்திருக்கும் ஷாருக்கானின் மகன்

Published on 07/12/2022 | Edited on 07/12/2022

 

Shah Rukh Khan son Aryan Khan finished his story as a writer

 

இந்திய அளவில் பிரபலமாகவும் பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருக்கும் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் என்பது அனைவரும் அறிந்ததே. ஆர்யன் கானும் நடிகராக வருவாரா என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், ஆர்யன் கானுக்கு நடிப்பில் ஆர்வம் இல்லை. ஆனால் இயக்கத்தில் ஆர்வமாக உள்ளார் என முன்னதாக தகவல் வெளியானது. மேலும் அதற்கான வேலையை ஆர்யன் கான் தொடங்கிவிட்டதாகவும் கூறப்பட்டது. 

 

ad

 

இந்நிலையில், ஆர்யன் கான் தனது சமூக வலைதள பக்கத்தில், "கதை எழுதி முடித்துவிட்டேன். ஆக்சன் சொல்லக் காத்திருக்கிறேன்" எனப் பதிவிட்டு இது தொடர்பான புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். ஆர்யன் கானின் இந்தப் பதிவிற்கு ஷாருக்கான் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், "சூப்பர்... சிந்தியுங்கள், நம்புங்கள், கனவு காணுங்கள். இவை அனைத்தும் முடிந்துவிட்டது. இப்போது தைரியமாக அதை செய்யுங்கள். உன்னுடைய முதல் ப்ராஜக்டுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். முதல் ப்ராஜெக்ட் எப்போதுமே ஸ்பெஷல்" எனப் பதிவிட்டுள்ளார். ஆர்யன் கானின் முதல் படைப்பு ஒரு வெப் சீரிஸாக இருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. 

 

ஆர்யன் கான், கடந்த வருடம் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்டு பின்பு ஜாமீனில் வெளியே வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Next Story

ஆர்யன் கானிடம் பாஸ்போர்ட்டை திரும்ப வழங்க வேண்டும் - நீதிமன்றம் உத்தரவு

Published on 14/07/2022 | Edited on 14/07/2022

 

special court order aryan khan should return the passport to Khan

 

கடந்த வருடம் அக்டோபர் 2ம் தேதி மும்பையிலிருந்து கோவா செல்லக்கூடிய  சொகுசு கப்பலில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் மும்பையில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஜாமீன் கோரி அவர் பலமுறை நீதிமன்றத்தை நாடிய நிலையில் கைது செய்யப்பட்டு 21 நாட்களுக்குப் பிறகு ஆர்யன் கானுக்கு நிபந்தனை ஜாமீன் கிடைத்தது. மேலும், இந்த வழக்கில் ஆரியன் கானுடன் மேலும் 8 பேர் கைது செய்யப்பட்டனர்.  

 

இவ்வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்த நிலையில் இறுதியாக ஆர்யன் கான் போதைமருந்து பயன்படுத்தவில்லை என்று கூறி இவ்வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். இதனிடையே ஆர்யன் கான் இவ்வழக்கில் சிக்கிய நேரத்தில் அவரது பாஸ்போர்ட் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் ஆர்யன் கான் தனது பாஸ்போர்ட்டை வழங்கும்படி சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். இதனை விசாரித்த நீதிபதி ஆர்யன் கானின் பாஸ்போர்ட்டை அவரிடம் அளிக்க உத்தரவிட்டுள்ளார்.