Skip to main content

உயரும் ரெப்போ வட்டி விகிதம் - ரிசர்வ் வங்கி அறிவிப்பு 

Published on 05/08/2022 | Edited on 05/08/2022

 

Rising Repo Rate

 

இந்தியாவில் ரெப்போ வட்டி விகிதம் 0.5 சதவிகிதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

 

வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் வட்டியான ரெப்போ வட்டி 0.5 சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ரெப்போ வட்டி விகிதம் 4.9 விழுக்காட்டில் இருந்து 5.4 விழுக்காடாக உயர்ந்துள்ளது. இந்த வட்டி விகித உயர்வு அதிகரிப்பால் வீடு, வாகனம், தனிநபர் கடனுக்கான வட்டியும் அதிகரிக்க உள்ளது.

 

நாட்டில் பண வீக்கம் அதிகரித்து வருவதால் ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கடன் வாங்கியவர்களின் இஎம்ஐ தொகை அதிகரிக்கும்; ரெப்போ விகிதம் மீண்டும் உயர்வு

Published on 08/02/2023 | Edited on 08/02/2023

 

Repo rate hike again: RBI announcement

 

ரெப்போ விகிதம் மீண்டும் அதிகரித்துள்ளது. ஆர்பிஐ கவர்னர் சக்தி காந்த தாஸ் ரெப்போ உயர்வை அறிவித்தார்.

 

ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் இன்று காலை 10 மணிக்கு நேரலை மூலம் இரு மாதத்திற்கான நாணய கொள்கை முடிவுகளை வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து அடுத்த இரு மாதத்திற்கான ரெப்போ விகிதம் உயர்ந்துள்ளதாக தெரிவித்தார். அதன்படி, அடுத்த இரு மாதத்திற்கான ரெப்போ விகிதம் 0.25% உயர்ந்து 6.50% ஆக இருக்கும் எனவும் கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

 

மேலும் பேசிய அவர், பணவீக்கம், விலைவாசி உயர்வு ஆகியவற்றை கட்டுப்படுத்தவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறினார். நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7% ஆக இருக்கும் எனவும் கூறியுள்ளார். 

 

நடப்பு நிதியாண்டில் ரெப்போ வட்டி விகிதத்தை 6 ஆவது முறையாக ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது. இந்த ரெப்போ வட்டி விகித உயர்வை அடுத்து வீடு வாகனங்களுக்கான கடன் வட்டிகளும் உயர வாய்ப்புள்ளது. வங்கிகள் கடனுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியதன் மூலம் கடன் வாங்கியவர்களுக்கான இஎம்ஐ தொகை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

2023 ஆம் ஆண்டுக்கான முதல் இரு மாத நாணயக் கொள்கைக் கூட்டம் என்பதோடு மட்டுமல்லாமல் மத்திய பட்ஜெட்டுக்குப் பின் நடக்கும் பின் நடக்கும் நாணய கொள்கைக் கூட்டம் என்பதால் இக்கூட்டத்தின் முடிவுகள் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.

 

 

Next Story

குறுகிய கால கடன்களுக்கான வட்டியை குறைத்தது ரிசர்வ் வங்கி!

Published on 06/06/2019 | Edited on 06/06/2019

இந்தியாவில் பொருளாதார மந்தநிலை குறித்து பிரதமர் நரேந்திர மோடி மத்திய அமைச்சர்களுடன் நேற்று ஆலோசனை செய்த நிலையில் இன்று ரிசர்வ் வங்கியின் உயர்மட்ட குழு கூட்டம் நடைபெற்றது. இந்திய ரிசர்வ் வங்கியின் தலைவர் சக்திகாந்த தாஸ் தலைமையில் நிதி கொள்கை ஆய்வு கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் 6 குழு உறுப்பினர்கள் பங்கேற்ற இந்த கூட்டத்தில், வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதத்தினை (ரெப்போ ரேட்) குறைப்பது என்ற முடிவுக்கு ஆதரவாக அனைவரும் ஒப்புதல் அளித்தனர்.

 

 

RBI BANK POLICY

 

 

இதன்படி 0.25 புள்ளிகள் குறைக்கப்பட்டு 5.75 சதவீதம் அளவிற்கு இந்த வட்டி விகிதம் இருக்கும். இதனால் ரியல் எஸ்டேட் போன்ற துறைகளில் உடனடியாக அதிக வளர்ச்சி காணப்படும்.  கடந்த 2010ம் ஆண்டு செப்டம்பருக்கு பின் முதன்முறையாக 6 சதவீதத்திற்கும் குறைவாக இந்த வட்டி விகிதம் குறைக்கப்பட்டு உள்ளது. இதேபோன்று நடப்பு நிதியாண்டு 2020- க்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியானது, முடிவடைந்த ஏப்ரல் மாதத்தில் இருந்த 7.2 சதவீதம் என்ற அளவில் இருந்து 7 சதவீதம் ஆக திருத்தி அமைக்கப்பட்டு உள்ளது.  இது முதல் அரையாண்டில் 6.4 முதல் 6.7 சதவீதம் என்ற அளவிலும், இரண்டாவது அரையாண்டில் 7.2 முதல் 7.5 சதவீதம் என்ற அளவிலும் இருக்கும்.

 

 

RBI

 

 

இந்த கூட்டத்தில் நுகர்வோர் விலை குறியீட்டு பணவீக்கம் ஆனது முதல் அரையாண்டில் 3.0 முதல் 3.1 சதவீதம் என்ற அளவிலும், இரண்டாவது அரையாண்டில் 3.4 முதல் 3.7 சதவீதம் என்ற அளவிலும் இருக்கும் வகையில் திருத்தியமைக்கப்பட்டு உள்ளது. தற்போது மார்ச் மாதம் முடிந்த நான்காவது காலாண்டில் (Q4) இந்தியாவில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5.8% ஆக குறைந்துள்ளது எனபது குறிப்பிடத்தக்கது.