Skip to main content

நள்ளிரவு 1 மணிக்கு கதவை தட்டிய சாமியார்: மடியில் அமர வைத்து...: கணவரும் உடந்தை என பெண் புகார்

Published on 12/09/2018 | Edited on 12/09/2018
Sri Vidyahamsa Bharathi Swamiji




தனது கணவர் உடந்தையுடன் நள்ளிரவு ஒரு மணிக்கு வீட்டினுள் நுழைந்ததுடன், படுக்கை அறையில் தள்ளி பலாத்காரம் செய்ய முயற்சி செய்ததாகவும், தன்னை தாக்கி கட்டாயப்படுத்தி அவரது மடியில் அமர வைத்தார் என்றும், பிரபல சாமியார் மீது பெண் ஒருவர் பரபரப்பு புகார் கொடுத்துள்ளார். மேலும் இந்த புகாரில் தன் கணவரை முதல் குற்றவாளியாக சேர்த்துள்ளார் அந்த பெண். 
 

கர்நாடக மாநிலம் மைசூர் ராம் மந்திர் மண்டபத்தில் ஸ்ரீ வித்யஹம்ச பாரதி சுவாமி தங்கியுள்ளார். சதுர்மாஸ்ய விரதம் அனுசரிப்பதற்காக இங்கு தங்கியுள்ளார். செப்டம்பர் 24ம் தேதி இந்த விரதம் முடிவடைகிறது. இந்த நாட்களில் தினசரி நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அவரிடம் ஆசி பெறுவதற்காக வருகின்றனர்.

தங்களது நிதி பிரச்சனைகள், குடும்ப பிரச்சனைகளை சொல்லுகின்றனர். அவரிடம் தங்களது பிரச்சனைகளை சொன்னால் அதற்கான தீர்வுகள் கிடைக்கும் என பொதுமக்கள் வருவதாக அவரை சந்திப்பவர்கள் தெரிவிக்கின்றனர்.
 

இந்த நிலையில் குவெம்ப்புநகர் காவல்நிலையத்தில், ராமகிருஷ்ணா நகரில் வசித்து வரும் கமலா என்ற பெண் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி ஸ்ரீ வித்யஹம்ச பாரதி சுவாமி மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது.
 

அந்தப் புகாரில், எனக்கு திருமணமாகி 15 வருடங்கள் ஆகிறது. எனது கணவர் ராஜேஷ் இந்த சாமியாரின் பக்தர். என்னையும் அவரிடம் சென்று ஆசி பெறுமாறு அடிக்கடி கூறி வந்தார். நமக்கு உள்ள கடன் பிரச்சினைகளை சாமி தீர்த்து வைப்பார். செப்டம்பர் 3ஆம் தேதி நீ போய்ப் பார் என்று கூறி வந்தார்.

ஆனால் நான் செவி சாய்க்கவில்லை. பார்க்க போக மாட்டேன் என்று கூறி விட்டேன். இந்த நிலையில் செப்டம்பர் 4ம் தேதி அதிகாலை 1 மணி வேளையில் நான் தூங்கிக் கொண்டிருக்கும்போது வீட்டில் காலிங் பெல் அடிக்கும் சத்தம் கேட்டது. இந்த நேரத்தில் யாராக இருக்கும்? வெளியே சென்றிருந்த கணவர்தான் வந்து விட்டாரோ... என்று நினைத்து கதவைத் திறந்தேன். ஆனால் அங்கே சாமியார் நின்றிருந்ததை பார்த்ததும் கடும் அதிர்ச்சியடைந்தேன்.
 

சாமியாருடன் அவரது ஐந்து சீடர்கள் வந்திருந்தனர். அவர்களுடன் எனது கணவரும் வந்திருந்தார். சாமியார் வேகமாக வீட்டுக்குள் புகுந்தவர் என்னைத் தள்ளி விட்டார். என்னை சரமாரியாக அடிக்க ஆரம்பித்தார். எனது தனிப்பட்ட பாகங்களிலும் அவர் பலமாக தாக்கினார். அசிங்கமாக பேசினார், திட்டினார். கோவிலுக்கு வந்து என்னை பார்க்க முடியாதோ என்று கோபமாக கேட்டார்.
 

பிறகு என்னை படுக்கை அறைக்கு இழுத்துச் சென்றார். அங்கு வைத்து என்னை பலாத்காரம் செய்ய முயன்றார். மனிதாபிமானமே இல்லாமல் நடந்து கொண்டார். என் ஆடைகளை கலைத்து அதனை தீ வைத்து எரித்தார். நான் அப்போது நிர்வாணமாக நின்றேன். என்னைக் கொல்லவும் முயற்சித்தார். உதவிக்காக நான் வெளியே சென்று பக்கத்து வீடுகளுக்கு செல்லாம் என்று நினைத்தபோது தடுத்தனர்.


பிறகு என்னை வெளியே கூட்டிச் சென்ற அவர் ஒரு வாகனத்தில் என்னைக் கட்டாயப்படுத்தி ஏற்றினார். அவரும் ஏறிக் கொண்டார். என்னை அவரது கட்டாயப்படுத்தி அவரது மடியில் அமர வைத்தார். 3 நாட்களில் வந்து என்னைப் பார்க்க வேண்டும். இல்லாவிட்டால் கொன்று விடுவேன் என்று சாமியார் மிரட்டியதாக புகாரில் கூறியுள்ளார்.


இந்த வழக்கில் பெண்ணின் கணவர் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். சாமியார் 2-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.  
 

 

 



 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஏ.வி. ராஜு மீது கருணாஸ் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்

Published on 21/02/2024 | Edited on 21/02/2024
Complaint against AV Raju in Karunas Police Commissioner's office

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் நிர்வாகியான ஏ.வி. ராஜு அண்மையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ‘கூவத்தூர் விவகாரத்தில் நடிகை த்ரிஷாவை தொடர்புப்படுத்திப் பேசியிருந்தார். மேலும் தன்னை அதிமுகவிலிருந்து நீக்க எடப்பாடி பழனிசாமிக்கு எந்த அதிகாரமும் இல்லை. அதிமுகவின் சட்ட விதிகளைத் தெரியாமல் எடப்பாடி பழனிசாமி உள்ளார்’ எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்திருந்தார்.

இந்நிலையில், கூவத்தூர் விவகாரத்தில் தன்னை தொடர்புப்படுத்தி இழிவாகப் பேசிய அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி. ராஜுவிற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள நடிகை த்ரிஷா, இது தொடர்பாக டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'கவனம் ஈர்ப்பதற்காக எந்த அளவுக்கும் தரம் தாழ்ந்து பேசுபவர்களை பார்ப்பதற்கே அறுவறுப்பாக உள்ளது. அவதூறு பேச்சுக்கு எதிரான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தமது வழக்கறிஞர்கள் தேவையான நடவடிக்கை எடுப்பார்கள்' எனத் தெரிவித்திருந்தார். அதிமுக நிர்வாகி ஏ.வி. ராஜுவின் பேச்சுக்கு த்ரிஷாவுக்கு ஆதரவாக சேரன், ஃபெப்சி அமைப்பு, மன்சூர் அலிகான், விஷால் உள்ளிட்டவர்கள் பேசினார்கள். இதனைத் தொடர்ந்து தென்னிந்திய நடிகர் சங்கம் தற்போது கண்டனம் தெரிவித்துள்ளது. 

இதனிடையே ஏ.வி. ராஜு, “என்னைப் பற்றி சமூக வலைத்தளங்களில், சில ஊடகங்களில் திரைப்படத் துறையினரை அவதூறாக நான் பேசியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நான் பேசியது அரசியல் ரீதியாக மட்டும் தான் பேசினேன். அந்த இடத்தில் பேட்டியை முடித்த பின்பு ஒரு சிலர் கேட்ட கருத்துக்கு நான் அந்த விளக்கத்தை சொன்னேன். எந்த இடத்திலும் திரைத்துறையினரை வருத்தப்படும் அளவிற்கு பேசக் கூடியவர் நான் அல்ல.

ஒருவேளை அப்படி பேசியதாக தகவல்கள் உங்களுக்கு தவறாக கிடைத்திருந்தால், நான் உங்கள் அனைவருக்கும், பெப்சிக்கும், திரைப்பட நடிகர் சங்கத்திற்கும் மற்றும் சம்பந்தப்பட்ட திரிஷாவுக்கும் என்னுடைய வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். ஒருவேளை மனம் புண்படும்படி இருந்திருந்தால் என் சார்பாக வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்” என வீடியோ வெளியிட்டிருந்தார். 

கூவத்தூர் விவகாரத்தில் த்ரிஷாவை சம்பந்தப்படுத்தி பேசியபோது கருணாஸ் குறித்தும் பேசியிருந்தார். இந்த நிலையில், ஏ.வி. ராஜு மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகர் கருணாஸ் புகார் அளித்துள்ளார். மேலும் அவரது பேட்டியை வெளியிட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

‘உன் நாய் எனக்கு வேண்டாம்!’ - ஒரு மாதம் கழித்து திருப்பிக் கொடுத்தவருக்கு கத்திக் குத்து

Published on 06/02/2024 | Edited on 06/02/2024
person who bought the dog and returned it after a month was stabbed

சாத்தூர் வட்டம் – புல்வாய்பட்டி கிராமத்தில் செல்லத்துரையும் அவருடைய  மனைவி முத்துலட்சுமியும் சொந்தமாக ஆடு மேய்த்துப் பிழைத்து வருகிறார்கள். அதே கிராமத்தில், கூலி வேலை பார்க்கும் வெங்கல கருப்பசாமி, மனைவி மாரீஸ்வரி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். செல்லத்துரையிடம் ரூ. 5000 விலை பேசி, ஒரு மாதம் கழித்துப் பணம் தருவதாகக் கூறி வேட்டை நாய் ஒன்றை வாங்கினார் வெங்கல கருப்பசாமி.

ஒருமாதம் கழித்து “எனக்கு இந்த நாய் வேண்டாம்..” என்று திருப்பிக் கொடுத்தபோது, வாங்க மறுத்திருக்கிறார் செல்லத்துரை. அதனால் இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், “நாயைத்  திருப்பியா கொடுக்கிற?” என்று ஆவேசமான செல்லத்துரை, வெங்கல கருப்பசாமியை கத்தியால் குத்தியிருக்கிறார். முதலில் ஏழாயிரம் பண்ணை ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றதைத் தொடர்ந்து, கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் வெங்கல கருப்பசாமி. அவர் அளித்த புகாரின் பேரில், செல்லத்துரை மீது சாத்தூர் தாலுகா காவல்நிலையம் வழக்குப் பதிவு  செய்துள்ளது.

அதே சாத்தூர் காவல்நிலையத்தில் செல்லத்துரை மனைவி முத்துலட்சுமி வெங்கல கருப்பசாமி மீது ஒரு புகாரளித்துள்ளார். அதில், தன் கணவர் செல்லத்துரையை வழிமறித்து கத்தியால் குத்த வெங்கல கருப்பசாமி  முயன்றபோது, அந்தக் கத்தியை தான் பிடுங்கியதாகவும், அப்போது தன்னை மார்பிலும் கழுத்திலும் வெங்கல கருப்பசாமி அடித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், வெங்கல கருப்பசாமி மீதும் சாத்தூர் தாலுகா காவல்நிலையத்தில் வழக்குப் பதிவாகியுள்ளது.