இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் அதிகாரியாக ராஜீவ்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.இதற்கான ஆணையை இந்திய குடியரசு தலைவர் பிறப்பித்துள்ளார்.
தற்பொழுது இந்திய தேர்தல் ஆணைய தலைமை தேர்தல் அதிகாரியாக இருக்கும் சுசில் சந்திரா வரும் 14 ஆம் தேதி ஓய்வு பெறும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால் வரும் 15 ஆம் தேதி புதிய இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் அதிகாரியாக ராஜீவ்குமார் பொறுப்பேற்பார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ராஜீவ்குமார் தேர்தல் ஆணையராக தற்பொழுது பணியாற்றி வருகிறார். ஜார்கண்டில் 1984 ஆம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியாக பணியில் சேர்ந்த ராஜீவ்குமார், 'டிபார்ட்மென்ட் ஆப் பைனான்சியல் சர்வீஸ்' துறையின் கீழ் வங்கிகள்,காப்பீடு நிறுவனங்களை கவனிக்கும் துறையின் செயலாளராக பணியாற்றியுள்ளார். தொடர்ந்து அந்த பதவியில் இருந்து ஓய்வுபெற்று தேர்தல் ஆணையராகவும், தற்பொழுது தலைமை சேர்ந்த அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.