இந்தியாவில் கரோனா இரண்டாவது அலையின் தீவிரம் அதிவேகமாக உள்ளது. இதனால் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துவருகிறது. கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன.
இந்த நிலையில், ராஜஸ்தான் மாநில முன்னாள் முதல்வர் ஜெகன்நாத் பஹாடியா (வயது 89) கரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்தார். 1980 - 1981 வரையிலான ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சி சார்பில் முதல்வராக ஜெகன்நாத் பஹாடியா பதவி வகித்தார். பின்னர், பீஹார் மற்றும் ஹரியானா மாநிலங்களில் ஆளுநராகப் பதவி வகித்தவர் பஹாடியா என்பது குறிப்பிடத்தக்கது.
அவரது மறைவுக்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள், ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
அந்தவகையில், பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "சமூக முன்னேற்றத்திற்கு அளப்பரிய பங்களிப்பை ஜெகன்நாத் பஹாடியா செய்துள்ளார்" என்று புகழாரம் சூட்டியுள்ளார்.