rahul gandhi's condolence to spb family

பாடகர் எஸ்.பி.பி -யின் குரல் என்றும் வாழும் என ராகுல் காந்தி தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

கரோனா பாதிப்பு காரணமாக ஆகஸ்ட் 5- ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் எஸ்.பி. பாலசுப்ரமணியம் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் எக்மோ, உயிர்காக்கும் பிற கருவிகளுடன் சிகிச்சை அளித்து வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று (25/09/2020) மதியம் 01.04 மணிக்கு உயிரிழந்தார். எஸ்.பி. பாலசுப்ரமணியம் மறைவால் திரையுலகினரும், ரசிகர்களும் கண்ணீரில் மூழ்கியுள்ளனர். மேலும், இந்தியா முழுவதிலும் இருந்து பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்களும் அவர் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "எஸ்.பி.பி அவர்களின் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த இரங்கல். அவரது பாடல்கள் பல மொழிகளில் கோடிக்கணக்கான இதயங்களைத் தொட்டன. அவரது குரல் என்றும் வாழும்.” என்று தெரிவித்துள்ளார்.

Advertisment